வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கோபி போட்ட டிராமாவுக்கு பாக்கியா எடுக்கப் போக முடிவு.. ராதிகா மயூவுக்காக சமாதானமான முன்னாள் பொண்டாட்டி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், நேற்று தான் கோபிக்கு புதுசா கல்யாணம் ஆன மாதிரி புருஷனுக்காக ராதிகா, மாமியாரிடம் முட்டுகிறார். அதே மாதிரி பிள்ளைக்காக ஈஸ்வரி, மருமகளிடம் மோதி கொள்கிறார். இதெல்லாம் தெரிந்தும் கண்டும் காணாமல் கோபி அட்ஜஸ்ட் பண்ணி போகிறார். ஆனால் பாவம் மயூதான் இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.

ஏனென்றால் என்னதான் பெரியவங்களுக்குள் பிரச்சனை இருந்தாலும் அது சின்ன பிள்ளைகள் தான் பாதிக்கும் என்பதற்கு ஏற்ப இனியா செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் மயூவும் பாதிக்கப்படுகிறார். அதாவது இனியா அவருடைய மேக்கப் பொருள்களை வைத்து அலங்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது இனியாவிற்கு ஃபோன் வந்ததும் வெளியே பேச போய் விடுகிறார்.

அந்த நேரத்தில் மயூ வந்து அந்த மேக்கப் பொருட்களை பார்த்ததும் ஆசைப்பட்டு முகத்தில் போட ஆரம்பித்து விடுகிறார். இதனை பார்த்து இனியா, மயூடன் கோபமாக பேச ஆரம்பித்து விடுகிறார். உடனே ஈஸ்வரி இதுதான் சான்ஸ் என்று மயூ சின்ன குழந்தை என்று கூட யோசிக்காமல் வாய்க்கு வந்தபடி திட்டி மயூவை அழ வைத்துவிட்டார். இதனை பார்த்த ராதிகா என்ன சொல்வது தெரியாமல் அமைதியாக நிற்கிறார்.

அத்துடன் கோபி வந்த நிலையில் மயூவுக்கு சப்போட்டாக பேசுகிறார். இதற்கும் கோபப்பட்டு ஈஸ்வரி கத்திய நிலையில் பாக்கியம் வந்து பிரச்சினையை சரி செய்யும் விதமாக இனியா கோபமாக பேசியதற்கு மயுவிடம் மன்னிப்பு கேட்க சொன்னார். அதே மாதிரி ராதிகா, நீ என்னதான் இருந்தாலும் மற்றவர்கள் பொருளை எடுப்பதற்கு முன் அவர்களிடம் பெர்மிஷன் கேட்டு தான் எடுத்திருக்க வேண்டும். அதனால் உன் மீதும் தப்பு இருக்கிறது என்று சொல்லி மயுவை இனியவிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்.

பிறகு பிரச்சினை எல்லாம் சமாளித்த நிலையில் கோபி, ராதிகாவிடம் எவ்வளவு பெரிய பிரச்சனை சண்டைகள் வந்தாலும் பாக்கியா அதை எளிதாக சமாளித்து விடுகிறார். பாக்யா உண்மையிலேயே சூப்பர் தான் என்று பாராட்டி பேசுகிறார். அடுத்ததாக கோபி இத்தனை நாளாக நல்லவர் மாதிரி வேஷம் போட்டது இந்த ஒரு தருணத்திற்கு தான் என்பதற்கு ஏற்ப பாக்யா ஹோட்டலில் பிரியாணியில் கலப்படம் செய்த விஷயமாக பாக்யா ஏற்கனவே புகார் கொடுத்திருந்தார்.

அந்த வகையில் அந்த புகார் கோர்ட்டுக்கு வர ஆரம்பித்துவிட்டது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஈஸ்வரி, நீ இன்னும் என் பிள்ளை மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்கவில்லையா என்று கத்த ஆரம்பித்து விடுகிறார். உடனே கோபி, என் மேல தான தப்பு இருக்கிறது அதற்கான தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நல்லவர் போல் பேச ஆரம்பித்து விட்டார்.

ஆனாலும் கோர்ட்டுக்கு வரும் பொழுது பாக்யா, ராதிகா முகத்தை பார்த்து பாவப்பட ஆரம்பிக்கிறார். அந்த வகையில் கோபிக்கு தண்டனை கிடைத்து விட்டால் பாதிக்கப்பட போவது ஒருவகையில் ராதிகா மற்றும் மயூ தான் என்பதால் அவர்களுக்காக கோபிக்கு தண்டனை கிடைக்காமல் பாக்கிய கேசை வாபஸ் வாங்கி விட வாய்ப்பு இருக்கிறது.

Trending News