வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

Gopi: சர்ச்சையான கேள்விக்கு கோபியின் மானசீக காதலி கொடுத்த பதிலடி.. இனி யாரும் கேள்வி கேட்க முடியுமா?

Gopi: சில ஆர்டிஸ்ட்களின் நடிப்பை மறக்கவே முடியாத அளவிற்கு அவருடைய கேரக்டர்கள் நின்னு பேசும் என்று சொல்வார்கள். அதிலும் சின்னத்திரையில் நடித்து வரும் ஆர்டிஸ்ட்கள் குடும்பத்தில் ஒருவர்களாக பதிந்து விடுவார்கள். அப்படித்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் வில்லன், காமெடியன் என அனைத்து பரிமாணங்களிலும் நடித்து வரும் கோபியை மறக்கவே முடியாது.

இவர் நெகட்டிவ் கதாபாத்திரம் நடித்து வந்தாலும் இவருடைய எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு தனக்கு பிடிச்ச ராதிகாவை மானசீகமாக காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டார். ஆனால் ராதிகாவின் கதாபாத்திரம் மட்டும் இன்னும் வரை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தான் இருக்கிறது.

ரேஷ்மாவின் சரவெடியான பதில்

சில சமயங்களில் ரொம்ப நல்ல கேரக்டராக காட்டப்படுகிறது. இன்னொரு சமயம் ஏன் இந்த அளவுக்கு பாக்கியா குடும்பத்திற்கு டார்ச்சர் ஆக இருக்கிறார் என்று திட்டும் அளவிற்கு நடித்துக் கொண்டு வருகிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ராதிகா என்கிற ரேஷ்மா பசுபுலேட்டியின் உருவ தோற்றத்தை கேலியும் கிண்டலும் பண்ணும் அளவிற்கு தொடர்ந்து விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

இவருடைய உதடு மற்றும் வாயை கிண்டல் பண்ணும் அளவிற்கு ரொம்பவே தவறான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார்கள். அத்துடன் சமீபத்தில் இவரிடம் உங்கள் உதடு ஏன் இவ்ளோ பெரிதாக இருக்கிறது என்று சர்ச்சையான கேள்வியை முன் வைத்து இருக்கிறார்கள். அதற்கு அவர், அது என்னுடைய உதடு அதை பெரிதாக்குவதும், சிறிதாக மாற்றுவதும் என்னுடைய விருப்பம்.

எனக்கு பெருசாக்க வேண்டும் என்ற ஆசை அதனால் நான் ஆபரேஷன் செய்து அதை அப்படி மாற்றிக் கொண்டேன். இதனால் உங்களுக்கெல்லாம் என்ன கஷ்டம் வந்தது என்று இவருக்கு எதிராக சர்ச்சைக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். இனியும் இவரிடம் யாராவது இப்படி கேள்வி கேட்டு வாலாட்ட முடியுமா? ரேஷ்மா என்றால் சும்மாவா என்பதற்கு ஏற்ப கேட்டுக் கேள்விக்கு பதில் அளித்து மடக்கி விட்டார்.

Trending News