Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப ஒரு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் அதற்கு அடாவடியாக முடிவை எடுத்ததால் தீர்வு கிடைக்கும். அப்படித்தான் பாக்கியாவின் முடிவும் எழிலுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.
தினந்தோறும் ஈஸ்வரிடம் மாட்டிக் கொண்டு எழில் மற்றும் அமிர்தா அவஸ்தைப்படுவது மட்டுமில்லாமல் எழில் கனவை நோக்கி பயணிக்க முடியாமல் ஈஸ்வரி அவ்வப்போது நம்பிக்கை இல்லாமல் பேசிட்டு வந்தால் எழில் நிச்சயமாக வெற்றி பெறுவதற்கு ஒரு தடைகற்களாக இருக்கும்.
நிம்மதியான வாழ்க்கை வாழ போகும் பாக்யாவின் வாரிசு
அதனால் தான் ஒரேடியாக எழில் இந்த வீட்டை விட்டு போய்விட்டால் அமிர்தாவுடன் சந்தோசமாகவும் இருப்பான். அதே நேரத்தில் சினிமாவில் சாதித்து வெற்றியும் பெறுவான் என்ற நம்பிக்கையில் பாக்யா, எழிலை வீட்டை விட்டு அனுப்பி விட்டார். இதான் சான்ஸ் என்று எழிலும் குடும்பத்தை விட்டு சுதந்திரப் பறவையாக பறப்பதற்கு தயாராகி விட்டார்.
ஒருவிதத்தில் எழிலுக்கு கஷ்டமாக இருந்தாலும் இனி அமிர்தா மற்றும் நிலாவை தொந்தரவு பண்ணும் அளவுக்கு ஈஸ்வரி டார்ச்சர் இருக்காது. ஆனால் இதில் நுழைந்து பாக்யாவிற்கு எதிராக எழிலை திருப்பலாம் என்று கோபி போட்ட கணக்கை சுக்குநூறாக உடைக்கும் விதமாக கோபி, எழிலை வீட்டிற்கு கூப்பிடுகிறார். ஆனால் எழில் வர முடியாது என்று சொல்லி கோபி நினைப்பை சுக்கு நூறாக உடைக்க போகிறார்.
தற்போது பாக்கியா, எழில் இல்லாமல் தவிக்கும் இந்த நேரத்தில் மறுபடியும் பாக்கியாவை டார்கெட் பண்ணும் விதமாக கோபி அடுத்த விஷயத்தை செய்ய போகிறார். அதாவது பாக்யா ரெஸ்டாரன்ட் வைத்து அதன் மூலம் யாரையும் நம்பி இல்லாமல் சொந்த காலில் என்ன சாதித்து வருகிறார்.
அதை தடுக்கும் பொருட்டாக கோபி செய்யப்போவது என்னவென்றால் பாக்யா வாங்கி இருக்கும் ரெஸ்டாரண்டை கைப்பற்றி பாக்கியாவை நடுத்தெருவில் நிப்பாட்டலாம் என்று கோபி டார்கெட் பண்ண ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் பாக்யாக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக கோபி ஆட்டம் ஆட போகிறார். ஆனால் என்ன நினைத்தாலும் பாக்கியவை அசைக்க முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப தன்னம்பிக்கையிடனும் துணிச்சலுடன் போராடிவரும் பாக்யாவுக்கு தொடர்ந்து வெற்றிகள் தான் கிடைக்கும்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- பாக்யாவை பற்றி தவறாக போட்டு கொடுத்த சகுனி
- ஈஸ்வரி இடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் பாக்யா மருமகள்
- பாக்கியாவிற்கு அடுத்து அமிர்தாவை டார்ச்சர் பண்ணும் ஈஸ்வரி