Gold Price: இனி தங்கம்னு பேப்பர்ல எழுதி கழுத்துல காதுல மாட்டிக்க வேண்டிய நிலைமையும் வந்திடும் போல. பத்து ரூபா குறைந்ததுன்னா ஆயிரம் ரூபாய் அதிரடியாய் ஏறுது. கடந்த சில தினங்களில் 1360 ரூபாய் வரை தங்கம் சவரனுக்கு குறைந்தது.
அதிரடியாய் உயர்ந்த தங்கம் விலை
அப்பாடியோ என்று பெருமூச்சு விட்டால் இன்று அதிரடியாய் உயர்ந்திருக்கிறது. புதன்கிழமையான இன்று தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 56,840 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 7,105 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி எந்த விலை மாற்றமும் இன்றி கிராமுக்கு 98 ரூபாயாக விற்கப்படுகிறது. அதேபோன்று ஒரு கிலோ வெள்ளி 98 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலைவாசியை பார்க்கும் பொழுது நேத்து நகை கடைக்கு போனவங்க பெரிய அளவில் தப்பிச்சிட்டாங்க என்றுதான் சொல்ல வேண்டும்.
நேற்று தங்க நகை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து இருந்தது. இனி தொடர்ந்து குறையும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் 200 ரூபாய் அதிகரித்து இருக்கிறது. ஏற்கனவே அடுத்த வருடத்திற்குள் தங்க நகை சவரனுக்கு ஒரு லட்சம் வரை உயரும் என பொருளாதார நிபுணர்கள் கணித்து வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக தொடர்ந்து இருந்து வருகிறது. போகிற போக்கில் பொங்கலுக்குள் சவரன் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.