
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் குடும்பத்திற்கு அரசி காதலித்ததை விட குமரவேலுவை காதலித்து தான் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் குமரவேலு அந்த அளவிற்கு பல இடங்களில் மோசமாக இருந்திருக்கிறார். முக்கியமாக சரவணன் கல்யாணம் நடக்கும் போது அந்த கல்யாணத்தை நிறுத்துவதற்காக மீனா மற்றும் ராஜியை கடத்திருக்கிறார்.
பெரியவங்க சண்டை போடும் பொழுது அதில் ரவுடித்தனமாக குமரவேலு இறங்கி அவமானப்படுத்தி இருக்கிறார் என்ற காரணத்தினால் அரசி, குமரவேலுவை காதலித்ததை நினைத்து பாண்டியன் குடும்பம் ரொம்பவே நொறுங்கிப் போய்விட்டார்கள். அத்துடன் சக்திவேலும் வாய்க்கு வந்தபடி ஓவராக பேசிய நிலையில் பாண்டியன் மனம் உடைந்து வீட்டை விட்டு போய்விட்டார்.
பிறகு கதிர் செந்தில் மற்றும் பழனிவேலு, பாண்டியனை கண்டுபிடித்து வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்கள். ஆனாலும் பாண்டியனின் நிலைமையை பார்த்து மொத்த குடும்பமும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிய நிலையில் கோமதி தன் வீட்டுக்காரர் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்படுகிறார். அப்பொழுது பாண்டியனிடம் அரிசி நான் இனிமேல் குமரவேலுவை பார்த்து பேச மாட்டேன். உங்களுக்கு பிடிக்காத எதையும் நான் பண்ண மாட்டேன் என்று சத்தியம் பண்ணுகிறார்.
உடனே கோமதி, அண்ணன் வீட்டுக்கு சென்று முத்துவேலுவை கூப்பிட்டு இனி என் பொண்ணால் உங்க குடும்பத்துக்கு எந்த பிரச்சனையும் வராது. அதே மாதிரி குமாரவேலு என் மகள் வாழ்க்கையில் தொந்தரவு பண்ண கூடாது அதற்கு நீங்கள் தான் பொறுப்பேற்று சத்தியம் பண்ண வேண்டும் அண்ணனிடம் அழுது கொண்டே மடிப்பிச்சை கேட்கிறார். முத்துவேலும் கோமதி கேட்ட சத்தியத்தை செய்து விடுவார்.
ஆக மொத்தத்தில் குமரவேலு அப்பா மீது சத்தியம் பண்ணி இருக்கிறார், அரசி அவருடைய அப்பா மீது சத்தியம் பண்ணி இருக்கிறார். இவர்களுக்காக பொறுப்பேற்று கோமதி இடம் முத்துவேல் சத்தியம் பண்ணி இருக்கிறார். ஆனால் இவர்கள்ர் செய்த சத்தியத்தை மீறி சூனியக்காரி வேலையை பார்த்து அரசி வாழ்க்கையை கெடுப்பதற்கு சுகன்யா கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார். இதனால் சக்திவேல் மற்றும் சுகன்யா கூட்டணி போட்டு நிச்சயம் பாண்டியன் குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்திவிடுவார்கள்.