புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாண்டியனின் மருமகளை அணு அணுவாக சித்திரவதை செய்யும் கோமதி.. சக்திவேல் போன்ற டிராமாவில் சிக்கிய அப்பத்தா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் செய்த தவறை மறக்கடிக்கும் விதமாக வீட்டில் இருப்பவர்களின் கோபத்தை நீக்க வேண்டும் என்று போராடி வருகிறார். அந்த வகையில் பாண்டியனிடம் ஏதோ பேசி மன்னிப்பு கேட்டு அட்வைஸை வாங்கிக் கொண்டார். ஆனால் கோமதி, தங்கமயிலை மன்னிக்காமல் திட்டிக் கொண்டே இருக்கிறார்.

இதனால் எப்படியாவது இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த வேண்டும் என்று மீனா மற்றும் ராஜி முடிவு பண்ணி அடுப்பங்கரையில் தங்கமயிலை சின்ன சின்ன வேலையை செய்ய சொல்கிறார்கள். ஆனால் இது பிடிக்காத கோமதி, தங்கமயிலை நோகடிக்கும் விதமாக கோபத்தையே காட்டுகிறார். அதாவது ஒரு சொலவடை சொல்வார்கள் வேண்டாத மருமகள் கைப்பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்று.

அது போல தான் கோமதியின் பேச்சு இருக்கிறது. தெரியாத்தனமாக ஒரு பாத்திரத்தை பதட்டத்தில் தங்கமயில் கீழே தவறவிடுகிறார். உடனே கோமதி, நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி வந்தவங்க. இருக்கிற பாத்திரத்தை உடைத்து விடாதே, உங்க லெவலுக்கு இல்லனாலும் எங்கள் லெவலுக்கு இதுதான் இருக்கிறது. நீ போய் ரூம்ல ஜாலியா இரு என்று திட்டி விடுகிறார்.

இப்படி எல்லாம் மாமியார் பேசுதே என்று ராஜி, மீனாவிடம் சொல்கிறார். அதற்கு எனக்கு மாமியாராக ராஜ்யம் பண்ண தெரியும் என்று காட்டுகிறார் என மீனா சொல்லுகிறார். இதனை அடுத்து சக்திவேல் வழக்கம்போல் குடும்பத்தில் பிரச்சனை செய்யும் விதமாக குமரவேலுக்கு எந்த வரனும் அமைய மாட்டேங்குது என்று மொத்த கோபத்தையும் காட்டும் விதமாக முத்துவேலுமிடம் ராஜியை பற்றி தவறாக பேசுகிறார்.

உடனே முத்துவேலும் நான் உன் பையனுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கிறேன். அவள் என்னுடைய மகளை இல்லை என்று தலைமுழுகிறேன் என்று சொல்கிறார். இதை கேட்ட ராஜி அம்மா சண்டை போட வீட்டில் மிகப் பெரிய கலவரம் வெடித்து விடுகிறது. உடனே முத்துவேலுக்கும் மனைவிக்கும் சண்டை வருவதை சக்திவேல் இருந்து வேடிக்கை பார்க்கிறார். இதை தடுக்க போனா அப்பத்தாவிற்கு நெஞ்சுவலி வந்து விட்டது.

உடனே இவர்கள் அனைவரும் சேர்ந்து அப்பத்தாவை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகிறார்கள். வீட்டில் ஏதோ சண்டை நடக்கு என்று சத்தத்தை கேட்ட ராஜி, அம்மா வீட்டில் பிரச்சனை என்று கோமதியிடம் சொல்லி வெளியே கூட்டிவிட்டு வருகிறார். ஆனால் கூட்டிட்டு வருவதற்குள் வீடு அடைத்து இருப்பதை பார்த்து கொஞ்சம் பதட்டம் அடைகிறார்கள்.

சக்திவேலு பொறுத்தவரை ராஜி குடும்பத்திற்குள் வந்து ஒட்டி விடக்கூடாது. சொத்து இரண்டாக போய்விடக்கூடாது என்ற காரணத்தினால் அவ்வப்போது முத்துவேல் மனதில் கோபத்தை அதிகரித்து ராஜியை வெறுக்க வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய ட்ராமாவை கொண்டு வருகிறார். அதில் தற்போது அப்பத்தா பலியாடாக சிக்கிவிட்டார்.

Trending News