விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித்தின் குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆகியுள்ளது. அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவதால் யார் கண் பட்டது என்று தெரியவில்லை. இப்பொழுது அஜித் படத்திற்கு நெருக்கடி வந்துவிட்டது. இந்த படம் ரிலீசில் சிக்கல் உருவாகியுள்ளது.
ஏப்ரல் 10, இந்த தேதியை இரண்டு படங்கள் கூறி வைத்திருந்தது. அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு என்பதால் அந்த விடுமுறை நாட்களுக்கு தகுந்தார் போல் அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் தனுஷின் இட்லி கடை இரண்டு படங்களும் வெளிவருவதாக இருந்தது.
இரண்டு படங்கள் வருவதால் விநியோகத்தர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவரும் நெருக்கடியில் இருந்தனர். ஒரே நேரத்தில் வெளிவருவதால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் பிரச்சனை காரணமாக இந்த விஷயத்தை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இப்பொழுது அஜித்தின் குட் பேட் அக்லி இந்த ரேஸில் இருந்து பின்வாங்குவது போல் தெரிகிறது. இதுவரை இந்த படத்தின் சாட்டிலைட் இன்னும் வியாபாரமாகவில்லை. ஏற்கனவே இந்த படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் 95 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. சாட்டிலைட் வியாபாரத்திற்கு சன் டிவியிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
ஒருவேளை சன் டிவி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமைகளை கேட்கிற தொகைக்கு வாங்கிவிட்டால் இது ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகும். அப்படி இல்லை என்றால் அஜித்தின் பிறந்தநாள் மே 1ஆம் தேதி வருகிறது. அன்று இதை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிடுகிறார்கள். இப்பொழுது தனுஷின் இட்லி கடைக்கே ரூட் கிளியராக இருக்கிறது.