ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் குட் பேட் அக்லி.. எவ்வளவு தெரியுமா.?

Good Bad Ugly: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது குட் பேட் அக்லி. அஜித், திரிஷா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ள நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார்.

அஜித்தின் தீவிர ரசிகராக இருந்த அவர் ஒரு ஃபேன் பாய்யாக குட் பேட் அக்லி படத்தை உருவாக்கி இருக்கிறார். இதில் தீனா, பில்லா, அமர்க்களம், மங்காத்தா என அஜித்தின் மாஸ் கதாபாத்திரங்களை கொண்டு வந்திருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அதிக பார்வையாளர்களை கடந்து வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதே நாளில் இந்த படத்தின் பிரீ புக்கிங் தொடங்கியது. இப்போது ரிலீஸுக்கு முன்பே இப்படம் வசூல் வேட்டையாடி வருகிறது.

ப்ரீ புக்கிங்கில் குட் பேட் அக்லி செய்த வசூல்

ப்ரீ புக்கிங்கில் குட் பேட் அக்லி படம் இந்திய அளவில் 7 கோடியும், உலக அளவில் 9 கோடியும் வசூல் செய்திருக்கிறது. இன்னும் படம் வெளியாக நான்கு நாட்கள் இருப்பதால் ப்ரீ புக்கிங் சூடு பிடித்து வருகிறது.

இதுவரை தமிழ் படங்கள் செய்யாத அளவுக்கு ப்ரீ புக்கிங்கில் குட் பேட் அக்லி படம் சாதனை படைக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் அஜித்துடன் வாலிக்கு பிறகு சிம்ரன் கேமியோ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

அர்ஜுன் தாஸ் வில்லனாக மிரட்டி உள்ளார். இவ்வாறு எதிர்பார்க்காத பல சஸ்பென்ஸ்கள் படத்தில் நிறைந்து இருப்பதால் அஜித் ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள். இதனால் அஜித்தின் கேரியரில் குட் பேட் அக்லி அதிக வசூல் செய்த படமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்