வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாடிவாசல் பாகங்கள் குறித்து வெற்றி மாறன் சொன்ன குட் நியூஸ்.. புலம்ப வைத்த விடுதலையால் வந்த சிக்கல்

வாடிவாசல் ப்ராஜெக்ட் கடந்த மூன்று வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. எல்லோரும் யூகிக்கும்படி இந்த படம் டிராப் இல்லை என வெற்றிமாறன் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்தார். இப்பொழுது சூர்யா ரசிகர்களுக்கு நற்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாடிவாசல் படம் 2025 மார்ச் மாதம் சூட்டிங் நடைபெற இருப்பதாகவும் அதற்குண்டான வேலைகள் எல்லாம் முன்கூட்டியே திட்டம் போட்டு உள்ளதாகவும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெற்றிமாறனின் விடுதலை 2 படம் ரிலீஸ் செய்யப்பட்டது..

வாடிவாசல் படம் எல்லோரும் எதிர்பார்த்தபடி ஜல்லிக்கட்டு சம்பந்தமான கதை கிடையாதாம். விடுதலை 2 படம் போலவே வாடிவாசல் படத்திலும் ஏகப்பட்ட அரசியல் சம்பந்தமான விஷயங்கள் இருக்கிறதாம். மேலும் இந்த படத்தை 3 பாகங்களாக எடுக்க திட்டமிட்டு வருகிறார் வெற்றிமாறன்.

ஏற்கனவே விடுதலை 2 படம் எடுப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இதில் வாடிவாசல் படம் மூன்று பாகங்களாக வெளிவருவது என்றால் குறைந்தது ஆறு வருடம் ஆகிவிடும் என பேச்சுக்கள் அடிபட்டது, ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெற்றிமாறன் தனது கருத்தை பகிர்ந்து உள்ளார்.

இந்தப் படத்தை மூன்று பாகங்களாக எடுப்பதற்கான வேலைகளை முடித்துள்ளதாகவும், இதற்கு உண்டான பிரத்தியேக சாப்ட்வேர் அனிமேட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடித்து விட்டதாகவும், ஏற்கனவே லண்டன் சென்று எல்லாத்தையும் சரிவர பார்த்து சீர்படுத்தியதாகவும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

Trending News