Google pixel in Tamil Nadu: மதுரை தமிழன் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்கும் போதே தமிழ்நாட்டிற்கு ஏதாவது ஒரு வெளிச்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு வெளிச்சத்தை தான் இப்போது அவர் பிறந்த மண்ணுக்கு கொடுத்திருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு சென்றது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. உண்மையில் தற்போது அதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. அரசியல் என்பதை தாண்டி வேலை வாய்ப்பை உருவாக்கும் அளவுக்கு ஸ்டாலின் ஆட்சி செய்திருக்கும் விஷயங்களை பாராட்டி தான் ஆக வேண்டும்.
இதுவரை ஸ்டாலின் வெளிநாடு பயணம் செய்ததில் 91.6 கோடி முதலீட்டை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா முதலீட்டாளர்கள் ஈர்ப்பு திட்டத்திற்காக அமெரிக்கா சென்றிருந்தார்.
சுந்தர் பிச்சையால் தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்
அங்கு கூகுள் நிறுவனத்துடனும் பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தெரிகிறது. இந்தியா ஸ்மார்ட் போன்கள் சந்தையில் இரண்டாவது இடத்தில் இருப்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் கூகுள் நிறுவனம் தன்னுடைய பிக்சல் போன் உற்பத்தி தொழிற்சாலையை இந்தியாவுக்கு கொண்டு வர ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது.
தற்போது தமிழ்நாட்டில் அந்த உற்பத்தி தொழிற்சாலை அமைக்க ஸ்டாலின் இடம், கூகுள் நிறுவன அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த விரைவில் தமிழ்நாடு வர இருக்கிறார்கள். இது குறித்து பாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகளுடன் கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. இது முடிவை எட்டியதும், இரண்டு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் முதலமைச்சரை சந்தித்திருக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் கூகுளின் கிளை நிறுவனம் Wing LLC ட்ரோன்கள் தயாரிக்கும் உற்பத்தியாளையும் தமிழ்நாட்டில் நிறுவ திட்டமிட்டு இருக்கிறது. இந்த ரெண்டு ப்ராஜெக்ட் பற்றி விரைவில் முடிவெடுக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே முதலமைச்சர் தன்னுடைய முதலீட்டாளர்கள் ஈர்ப்பு திட்டத்தின்படி 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இப்போது ஐபோன் தொழிற்சாலை மற்றும் ட்ரோன் தொழிற்சாலை மூலம் தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து முதல் பத்து லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது.