2024 Movies: 2024 ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் சில வாரங்கள் தான் இருக்கிறது. எப்போதுமே வருடம் முடியும் போது அந்த வருடத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் பகிரப்படும்.
அப்படி இந்த வருடத்தில் கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட 10 படங்களின் லிஸ்ட் வெளியாகியிருக்கிறது. இந்த லிஸ்டில் இரண்டு தமிழ் படமும் இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
அட! பத்துல இரண்டு தமிழ் படம்
ஸ்ட்ரீட் 2: ஷ்ரதா கபூர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம் தான் ஸ்ட்ரீட் 2. இது ஒரு காமெடி திரில்லர் படமாகும்.
கல்கி 2898 AD: கமலஹாசன், அமிதாப்பச்சன், பிரபாஸ் நடிப்பில் உருவான படம் தான் கல்கி.
இந்த படம் தமிழ்நாட்டில் கலவையான விமர்சனத்தை பெற்றது. மற்ற மொழி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
12th பெயில்: மனதை வருடும் ஒரு மெல்லிய கதைக்களம் தான் 12th பெயில். இந்த படம் தியேட்டர் ரிலீஸ் விட OTT ரிலீஸ் போது பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது.
லாபட்டா லேடிஸ்: புதிதாக திருமணமான தம்பதிகளை மையமாகக் கொண்ட வெளியான படம். இந்த படம் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்து அனுப்பப்பட்டிருக்கிறது.
ஹனுமான்: தென்னிந்தியாவில் அதிக வசூல் செய்த 10 படங்களின் லிஸ்டில் எட்டாவது இடத்தில் இருப்பது தான் ஹனுமன். இந்த படம் மொத்தம் 350 கோடி வசூல் செய்திருக்கிறது.
மகாராஜா: விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியான மகாராஜா மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படி ஒரு கதை களத்தை இதுவரை தமிழ் சினிமா பார்த்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மஞ்சும்மல் பாய்ஸ்: மலையாள சினிமாவிற்கு இந்த வருடம் கிரீடமாக அமைந்த படம் தான் மஞ்சுமல் பாய்ஸ். குணா குகை, கண்மணி அன்போடு பாடல் மூலம் தென்னிந்தியாவை தெறிக்க விட்டது.
தி கோட்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படமும் இந்த லிஸ்டில் இணைந்திருக்கிறது.
சலார்: இந்த வருடம் பிரபாஸ் சினிமா கேரியரில் முக்கியமாக அமைந்தது சலார். கலவையான விமர்சனங்கள் என்றாலும் வசூல் ரீதியில் பட்டையைக் கிளப்பியது.
ஆவேசம்: ஜித்து ஜோசப் இயக்கத்தில், பகத் பாசில் நடிப்பில் பட்டையை கிளப்பிய படம் தான் ஆவேசம். 30 கோடி செலவில் உருவான இந்த படம் 150 கோடி வசூலித்தது.