Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி தன்னை நம்பி வந்திருக்கும் அம்மாவை எந்தவித கஷ்டமும் படுத்த கூடாது என்பதற்காக பொக்கிஷமாக பார்த்து வருகிறார். அதற்கு ஏற்ற மாதிரி கோபி அனைத்து விஷயங்களிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இதனால் ராதிகாவை கண்டுக்காமல் எந்நேரமும் அம்மா என்று புராணம் பாடுகிறார்.
இதனை பார்த்த ராதிகா கடுப்பாகி உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார். இருந்தாலும் கோபி ராதிகாவை அலட்சியப்படுத்தி விட்டார். இதனைப் பார்த்த ராதிகாவின் அம்மா உனக்காக இல்லாட்டாலும் உன் வயிற்றில் குழந்தை இருக்கிறது என்ற நினைப்பு கூட இல்லாமல் இப்படி அலைகிறாரே என்று போட்டுக் கொடுக்கிறார். இதனால் இன்னும் அதிகமான கோபத்துடன் ராதிகா இருக்கிறார்.
பாக்கியா சொல்லப் போகும் உண்மை
இதனை தொடர்ந்து இனியாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பாக்யா வீட்டில் ஒரு சின்ன நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பழனிச்சாமி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வருகிறார்கள். அப்பொழுது கோபியும் இனியாவுக்கு கிப்ட் கொண்டு வருகிறார். அப்பொழுது பழனிச்சாமியின் அம்மாவும் அக்காவும் அப்படியே பூவும் தாம்பலமும் எடுத்துட்டு வந்தால் இங்கே வச்சே பேசி முடித்து விடலாமே என்று பேசிக் கொள்கிறார்கள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியான கோபி என்ன விஷயம் என்று பழனிசாமியின் அம்மாவிடம் கேட்கிறார். அதற்கு பழனிச்சாமியின் அம்மா என் பையனுக்கும் பாக்யாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறோம் என்று சொல்கிறார். இதை எதிர்பார்க்காத கோபி திருட்டு முழி முழித்துக் கொண்டு இனியாவின் பிறந்தநாளை நல்லபடியாக முடித்து விடுகிறார்.
ஆனாலும் எப்படி பாக்கியா வேறு ஒருவரை கல்யாணம் பண்ணலாம் என்ற நினைப்பில் பாக்கியா ஹோட்டலுக்கு கோபி போகிறார். அங்கே போயிட்டு பாக்கியவை பார்த்து நீ எல்லாம் ஒரு அம்மாவா என்று கேள்வி கேட்டு உனக்கும் பழனிச்சாமிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறார்களாம். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடக்கிறது என்று சொல்லி பாக்கியவை திட்டுகிறார்.
இது எதுவும் தெரியாத பாக்கியா, கோபியை வாயை மூடுங்கள் என்று சொல்லிய நிலையில் கோபி, பழனிச்சாமி அம்மா பேசியதை கூறுகிறார். அப்பொழுதுதான் பாக்யாவிற்கு என்ன நடக்கிறது என்ற உண்மை கொஞ்சம் புரிய ஆரம்பிக்கிறது. இருந்தாலும் கோபியிடம் எதையும் காட்டிக்க கூடாது என்பதற்காக கோபியை வாயடைக்க வைத்து வெளியே அனுப்பி விடுகிறார்.
பிறகு பாக்யா, பழனிச்சாமி என்ன நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அதன்படி இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப் போகிறார். அந்த வகையில் கூடிய விரைவில் பழனிச்சாமியின் நினைப்பிற்கு குட் பாய் சொல்லும் விதமாக பாக்கியா அவருடைய மனதில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் கூறி பழனிச்சாமிக்கு நோ சொல்லப் போகிறார். இதனால் வருத்தப்பட்டு கடைசியில் ஏமாந்து நிற்கப் போகிறார் பழனிசாமி.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- Bhakkiyalakhsmi: கோபிக்கு கெடு வைத்த சக்காளத்தி குடும்பம்
- பழனிச்சாமி காதலில் இடியை இறக்கப்போகும் பாக்யாவின் வாரிசு
- Bhakkiyalakshmi: கோபி வச்ச ஆப்பு பாக்கியாவுக்கு இல்ல ராதிகாவுக்கு