வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கடுப்பேற்றிய கோபி.. பொறுமையை இழந்து கண்டபடி கத்திய கள்ள காதலி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில்  மனைவியை விட்டுவிட்டு, கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள கோபி தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.  இந்நிலையில் ராதிகாவின் வீட்டிற்கு வந்திருக்கும் கோபி,  பாக்யா உடன் நெருங்கி ராதிகா பழகுவதை  தடுப்பதற்காக  பக்கா பிளான் போட்டுக் கொண்டிருக்கிறான்.

அதாவது  பாக்யாவின் வீட்டிற்கு அருகே இருக்கும் ராதிகாவின் வீட்டை  மாற்ற வேண்டுமென ராதிகாவிடம் கோபி வலியுறுத்துகிறான்.  இதனால் கடுப்பான ராதிகா, சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டுக்கு எதற்கு செல்ல வேண்டும் என கோபியை எதிர்க்கிறார்.

இருப்பினும் உலகமகா நடிப்புக்காரன் கோபி,  ராதிகாவின் முதல் கணவன்  ராஜேஷ்சை காரணம் காட்டி வேறு வீட்டிற்கு செல்ல வேண்டுமென ராதிகாவின் மனதை மாற்றுகிறான்.

ராதிகாவும்  அரைகுறை மனதுடன் இந்த விஷயத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.  இவ்வாறு கோபி யாரிடம் எப்படிப் பேசினால், எப்படி காரியம் நடக்கும் என்பதை புரிந்து கொண்டு  பாக்கியலட்சுமி சீரியலின்  படு வில்லனாக  மாறிக்கொண்டு இருக்கிறான் .

மேலும் பாக்யா பாசத்திற்கு அடிமையாகி கோபி சொல்வதை கேட்கும் நிலைமையில் இருக்கின்றார். கோபியின் சுயரூபம் பாக்யாவிற்கு தெரிந்தால் கோபிக்கு எதிராக மாற தயங்கமாட்டார். அதுவும் கூடிய விரைவில் நடக்கப் போகிறது.

அதுமட்டுமின்றி கோபியை பற்றிய உண்மை எல்லாம் ராதிகாவிற்கு தெரிந்தாலும், தனக்குக் கிடைத்த இரண்டாவது வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்வதற்காக பாக்யாவிற்கு வில்லியாக இனிவரும் நாட்களில் ராதிகா மாறப்போகிறார்.

Trending News