Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா அம்மா கொடுத்த கம்ப்ளைன்ட் படி ஈஸ்வரியை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய் விட்டார்கள். இது எதுவும் புரியாத கோபி, இனியாவிடம் என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொள்கிறார். ஆனால் அதற்குள் கோபியின் அப்பா எல்லாத்துக்கும் நீ தான் காரணம் என்று கன்னத்தில் பளார் பளார் என்று அடி கொடுக்கிறார்.
பிறகு ஒட்டுமொத்த கோபத்தையும் ராதிகாவிடம் காட்டும் விதமாக வீட்டிற்கு போகிறார். அங்கே ராதிகாவை பார்த்து கேட்கும் பொழுது ராதிகாவின் அம்மா கமலா நான் தான் கம்ப்ளைன்ட் கொடுத்தேன். உங்க அம்மா என் மகளை கீழே தள்ளிவிட்டு குழந்தை இல்லாமல் ஆக்கிவிட்டார். இதை பார்த்துட்டு நான் சும்மா இருக்கணுமா. அதனால்தான் அந்த கொலைகாரி மீது கம்ப்ளைன்ட் கொடுத்தேன் என்று சொல்கிறார்.
அவமானப்பட்டு நிற்கும் ஈஸ்வரி
இதை கேட்டு கோபப்பட்ட கோபி, ராதிகாவின் அம்மாவிற்கு மரியாதை கொடுக்காமல் நீ வா என்று பேசி திட்ட ஆரம்பிக்கிறார். என்னுடைய அம்மாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.? தேவையில்லாமல் எங்க குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாதீர்கள். உங்க பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் ராதிகா இந்த அளவுக்கு மாறி போயிருக்கிறார்.
எங்க அம்மாவுக்கு மட்டும் உங்க ரெண்டு பேராலும் ஏதாவது பிரச்சனை வரட்டும் அதுக்கப்புறம் இருக்கு என்று ராதிகாவின் ராதிகாவின் அம்மாவை திட்டி சண்டை போடுகிறார். ஆனாலும் ராதிகாவின் அம்மா எதற்கும் ஆசராமல் கோபியை உதாசீனப்படுத்துகிறார். பிறகு கோபி, போலீஸ் ஸ்டேஷனுக்கு அம்மாவை பார்ப்பதற்கு போகிறார்.
இதற்கிடையில் பாக்கியா, மாமனாரை கூட்டிட்டு ஈஸ்வரியை சந்திப்பதற்கு போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார். ஆனால் ஈஸ்வரியை சந்திப்பதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை. எழில் மற்றும் செழியன் லாயரை கூட்டிட்டு வந்து போலீஸிடம் பேச வைக்கிறார்கள். ஆனால் இந்த கேஸ் ரொம்பவே சீரியஸாக இருப்பதால் எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் தான் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று போலீஸ் கூறுகிறார்கள்.
இதைக் கேட்டு மொத்தமாக நொறுங்கிப் போய் என்ன பண்ணுவது என்று தெரியாமல் பாக்யாவின் குடும்பம் ஒட்டுமொத்தமாக கவலையில் இருக்கிறது. இந்த நேரத்தில் அங்கே வந்த கோபியிடம், தாத்தா சண்டை போட்டு கோவமாக பேசுகிறார். இந்த ராதிகா மற்றும் அவருடைய அம்மாவால் தேவையில்லாமல் ஈஸ்வரி கண்ணீர் விட்டு அழுது புலம்பும் படி கதறுகிறார்.
இதனைத் தொடர்ந்து கோர்ட்டில் ராதிகா மற்றும் கோபி சொன்ன சாட்சியின்படி ஈஸ்வரி ஜெயிலுக்கு போக நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இதனால் மனதளவில் உடைந்து போன ஈஸ்வரி உடல் ரீதியாக ஒரு பிரச்சினையை சந்திக்கும் அளவிற்கு விபரீதம் நடக்கப் போகிறது. கடைசியில் இந்த கோபி நம்பிய பாவத்துக்கு ஈஸ்வரிக்கு மிகப்பெரிய தண்டனையாக அமைந்துவிட்டது. இதனால் ஈஸ்வரி இல்லாமல் பாக்கியா குடும்பம் ஒட்டுமொத்தமாக தவிக்கப் போகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- ஈஸ்வரிக்கு எதிராக சாட்சி சொல்லிய ராதிகா
- ஈஸ்வரியை பார்த்து அலறி அடித்து ஓடி ஒளிஞ்ச ராதிகா
- கோபியை நம்பின பாவத்துக்கு ஈஸ்வரிக்கு கிடைத்த தண்டனை