வியாழக்கிழமை, மார்ச் 6, 2025

காதலனுடன் லூட்டி அடித்த இனியாவை பொறிவைத்து பிடித்த கோபி.. சைலன்டான பாக்கியா, செல்விக்கு வரும் பிரச்சினை

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி பாக்கியாவுக்கு ஏதோ நல்லது செய்றேன்னு தனியாக இருந்த பிள்ளைகள் அனைவரையும் ஒன்றாக ஒரே வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டார். ஆனால் இது பாக்யாவுக்கு தான் மிகப்பெரிய தொந்தரவாக இருக்கிறது. ஏனென்றால் அனைவருக்கும் வீட்டிலும் சமைத்து ரெஸ்டாரண்டையும் பார்ப்பதற்கு பாக்யாவால் முடியவில்லை.

அதனால் அலுத்துபோன பாக்கியா மொத்த கோபத்தையும் கோபி மீது காட்டும் அளவிற்கு ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். இன்னொரு பக்கம் எழில், கோபியிடம் பாட்டி குழந்தை விஷயத்தைப் பற்றி என்னிடமும் அமிர்தாவிடமும் பேசவே கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். அதனால் கோபி, ஈஸ்வரியை பார்த்து எழிலிடம் இனி குழந்தையை பற்றி பேச வேண்டாம்.

அவர்களுக்கு என்ன பண்ணனும் எப்படி இருக்கணும் என்று அவர்களுக்கு தெரியும். நீ என் குழந்தை பற்றி தேவையில்லாமல் கேட்டு அவங்களை கஷ்டப்படுத்துகிறாய் என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி இதெல்லாம் நீயும் பாக்கியாயாவும் சொல்ல வேண்டிய விஷயம். ஆனால் இரண்டு பேரும் இதில் கண்டு கொள்ளாமல் இருப்பதால் நான் பேச வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன்.

வீட்டில் இருக்கும் பெரியவங்களுக்கு இதுதான் நினைப்பு அதனால் அதைப் பற்றி தான் சொல்லுவாங்க. அடிக்கடி இதைப் பற்றி சொல்லிக் கொண்டு இருந்தால்தான் எழிலுக்கும் அமிர்தாவுக்கும் மண்டையில் உரைக்கும். அதனால் யார் என்ன சொன்னாலும் நான் அவ்வப்போது கேட்டுக் கொண்டே தான் இருப்பேன் என்று கோபியிடம் சொல்லி கோபி வாயை அடைத்து விடுகிறார்.

இதனால் இனி அம்மாவிடம் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்று முடிவு பண்ணிய கோபி, தனியாக போய் புலம்பிக் கொள்கிறார். பிறகு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பாக்கியா நிற்கக் கூட நேரமில்லாமல் சமைத்துக் கொடுப்பதை கோபி பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இப்பொழுதுதான் கோபிக்கு தெரிகிறது அவசரப்பட்டு விட்டோமோ என்று.

ஆனாலும் எதுவும் பண்ண முடியாத காரணத்தால் கோபி சைலண்டாக இருந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது இனியவும் எனக்கு காலேஜுக்கு டைம் ஆகிவிட்டது சாப்பாடு வேண்டாம் என்று பரபரப்பாக பாக்கியாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் கோபி பக்கத்தில் இருக்கும் இனியாவின் போனில் மெசேஜ் வருகிறது. அந்த மெசேஜை கோபி பார்த்து விடுகிறார்.

அது ஆகாஷ் அனுப்பிய மெசேஜ் தான், உனக்காக நான் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று ஹார்ட் போட்டு இருக்கிறார். இதை பார்த்ததும் கோபிக்கு இனிய மீது சந்தேகம் வந்துவிட்டது. உடனே இனிய கிளம்பும்பொழுது கோபி நிற்க வைத்து எங்க போற என்ன விஷயம் இப்பொழுது காலேஜ் கிடையாது என்ன ஸ்பெஷல் கிளாஸ் எக்ஸாமும் கிடையாது என்று தொடர்ந்து கேள்வி கேட்கிறார்.

கோபி இப்படி கேள்வி கேட்பதை பார்த்த பாக்யா சைலன்டாக நிற்கிறார். அத்துடன் எழில், அப்பா திருந்தி விட்டார் என்பதற்காக ரொம்பவே நல்லவராக மாறிவிட்டார் என்று சொல்கிறார். பிறகு இனியாவிடம் நான் உன்னை காலேஜில் டிராப் பண்ணுகிறேன் என்று சொல்லி இனியாவை கூட்டிட்டு கோபி கிளம்பி விடுகிறார். அப்படி போகும் பொழுது கோபியிடமிருந்து தப்பிப்பதற்காக இனிய பொய் சொல்லி இருக்கிறார்.

ஆனால் கோபியும் விடாமல் கேள்வி கேட்பதால் இனிய நீங்க என்ன அம்மா மாதிரி இவ்வளவு கேள்வி கேட்கிறீங்க. எனக்கு கொஞ்சம் பொருள் வாங்க வேண்டியது இருக்கிறது. அதை வாங்கிட்டு நான் காலேஜுக்கு போய் விடுகிறேன் என்று சொல்லி பாதிலேயே இறங்கி விடுகிறார். பிறகு கோபி கொஞ்ச தூரம் போன பின் அங்கு இருக்கும் ரெஸ்டாரண்டுக்குள் இனிய போய்விடுகிறார்.

அங்கே ஆகாஷ் காத்துக்கொண்டிருந்ததால் இரண்டு பேரும் மறுபடியும் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் கோபி, இனியாவை இறக்கி விட்ட இடத்திற்கு மறுபடியும் வந்து பார்க்கிறார். அப்பொழுது அங்கே இருந்த ரெஸ்டாரண்டுக்குள் கோபி போய் பார்க்கிறார். அந்த ரெஸ்டாரண்டில் இனியா ஆகாஷ் உடன் சிரிச்சு பேசிக்கொண்டிருப்பதை கோபி பார்த்து விடுகிறார். கோபி பார்த்து விட்டார் என்பதை இனியா மற்றும் ஆகாஷும் பார்த்து விட்டார்கள்.

அந்த வகையில் இனியா ஏதாவது சொல்லி சமாளிச்சாலும் கோபிக்கு நிச்சயம் இனிய மீது சந்தேகம் வந்துவிட்டது. அத்துடன் கோபி, செல்வி மகனை இனிய காதலிப்பதால் எதிர்ப்புதான் தெரிவிப்பார். அது மட்டும் இல்லாமல் இதைப்பற்றி செல்விடம் சொல்லி கண்டிக்கப் போகிறார். இதனால் செல்விக்கு தான் பிரச்சனை வரப்போகிறது.

Trending News