சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

சக்களத்திடம் சரணடைந்த கோபி.. 40 லட்சத்திற்கு புருஷனை விற்ற பாக்யா!

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த கணவர் கோபி, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிந்ததும் மனைவி பாக்யா கோபியை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்குப் பிறகு அவருடன் ஒரே வீட்டில் வாழ முடியாது என முடிவெடுத்து அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினார்.

கோபி வெளியே போனதற்குப் பிறகு கோபியின் அம்மா, இனியா, செழியன் என அனைவரும் கோபிக்கு சாதகமாகப் பேசி பாக்யாவை திட்டித் தீர்க்கின்றனர். இதனால் மனமுடைந்த பாக்யா ஒரு மூலையில் முடங்கி அழுகிறார். அப்போது அவரை வீட்டு வேலைக்காரி செல்வி சமாதானப்படுத்துகிறார்.

Also Read: 50 வயதில் கள்ளக்காதலுக்காக சாகத் துணிந்த கோபி!

மேலும் பாக்யா செய்தது அனைத்தும் சரியானது என்று செல்வி பாக்யாவிற்கு சாதகமாக பேசுவதுடன், இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரைவில் பாக்யாவை புரிந்து கொள்வார்கள் என்றும் தேற்றுகிறார். மேலும் கோபியும் நேராக ராதிகா வீட்டிற்கு சென்று அவருடன் சேர்ந்த வாழ்வதுடன் இரண்டாவது திருமணமும் செய்து கொள்வார் என்ற பயம் கோபியின் அம்மாவிற்கு எழுகிறது.

கோபியின் அம்மா நினைத்தது போல, கோபியும் ராதிகா வீட்டிற்கு சென்ற அவருக்கு சோப்பு போடும் அளவுக்குப் நரித் தந்திரமாக பேசி அவருடைய மனதைக் கரைக்கிறார். கோபிக்கு ராதிகாவின் அண்ணனும் சப்போர்ட்டாக பேசுவதால், ராதிகா கோபியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்திற்கு வருகிறார்.

Also Read: அட்ரா சக்க, பாக்யாவை சுத்தலில் விடும் கோபி!

இதன் பிறகு ராதிகாதான் பாக்யாவிற்கு வில்லியாக பாக்கியலட்சுமி சீரியலில் மாறப்போகிறார். ஆனால் கோபி தன்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார் என்ற கவலை பாக்யாவிற்கு இனி வரும் நாட்களில் துளிகூட தோன்றாது.

ஏனென்றால் அவருடைய முழு கவனம் எல்லாம் கோபியிடம் சவால் இட்டபடி 40 லட்சத்தை ஒரு வருடத்திற்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற வெறியுடன் கேட்டரிங் தொழிலில் முழுவீச்சில் தனது கவனத்தை செலுத்தி முன்னேற போகிறார்.

Also Read: பாக்கியலட்சுமி சீரியலில் எல்லைமீறிய கோபி!

Trending News