வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

சுளுக்கு எடுத்து விட்டு சூடேற்றும் கோபி.. இனி அவ எனக்கு X-பொண்டாட்டி!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக இணைந்து வாழ்ந்த மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள கோபி துணிந்துவிட்டான்.

இதனால் பாக்யாவிற்கு தெரியாமலே விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய கோபி, தற்போது நீதிமன்றத்துக்கு எதற்கு செல்கிறோம் என்பதை தெரியப்படுத்தாமல் பாக்யாவை அங்கு அழைத்து செல்கிறான். நீதிபதி அங்கு பாக்யவிடம் விவரமாக விவரிக்காமல், ‘இதற்கு உங்களுக்கு சம்மதமா?’ என்று கேட்க, பாக்யாவும் சம்மதமென தெரிவித்து விடுகிறார்.

அப்படித்தான் சொல்ல வேண்டும் என கோபி ஏற்கனவே பாக்யாவிடம் கூறியிருக்கிறான். இது ஒருபுறமிருக்க ராதிகாவின் வீட்டில் கோபி செய்யும் அட்டூழியம் தற்போது எல்லை மீறிப் சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் கோபி ராதிகாவின் காலை பிடித்து அமுக்கி விடுவது, அவருக்கு சொடக்கு எடுத்து சூடேற்றுவதும், கொஞ்சிக் குலவுவது போன்ற செயல்கள் பாக்கியலட்சுமி சீரியலை பார்க்கும் ரசிகர்களை மேலும் கடுப்பேற்றுகிறது.

அத்துடன் இனிமேல் ராதிகா தான் தனக்கு எல்லாம், அவர்தான் தன்னுடைய வாழ்க்கை. மனைவி பாக்யா தன்னுடைய வாழ்க்கையில் இனிமேல் இல்லை என கோபி வாய் கூசாமல் பேசுவது சின்னத்திரை ரசிகர்களை வெறியேற்றுகிறது.

அதுமட்டுமின்றி பாக்யாவிற்கு கோபி தன்னை நீதிமன்றத்திற்கு விவாகரத்து பெறுவதற்காக தான் அழைத்து செல்கிறார் என்பதை இனி வரும் நாட்களில் தெரியவந்தால் அவர் எவ்வளவு முட்டாளாக வாழ்ந்து இருக்கிறேன் என்பதை நினைத்து பெரிதும் வேதனைப் படுவார்.

அத்துடன் நம்பிக்கை துரோகம் செய்த கணவன் இனிமேல் தேவை இல்லை என்று கோபியை அடியோடு வெறுத்து, தன்னுடைய பிள்ளைகளுக்காகவும்  மாமியார் மாமனாருக்காகவும் குடும்பத்தை பார்த்துக்கொண்டு தனித்து வாழும் முடிவை பாக்யா எடுக்கப் போகிறார்.

Trending News