வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

தொழிலதிபர் பாக்யாவை முடித்து விட நினைத்த கோபி.. எழில் எடுக்கும் அதிரடி முடிவு

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் எந்த தவறும் செய்யாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஒரு நாள் இரவு முழுவதும் பாக்யா பட்ட கஷ்டம் அவளுடைய குடும்பத்திற்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட தாலி கட்டிய கணவன் கோபி, பாக்யாவிற்கு துணையாக நிற்காமல், ராதிகாவுடன் சேர்ந்து அவளுடன் வீட்டிலேயே இருந்தது மட்டுமல்லாமல் அவளை விட்டு பிரியாமல் அவளுக்கு பக்கபலமாக இருந்தான்.

இருப்பினும் பாக்யாவின் இரண்டு மகன்கள், பாக்யா எந்த தவறும் செய்யவில்லை என நீதிமன்றத்தில் நிரூபித்து தற்போது அவளை மீட்டெடுத்த வீட்டிற்கு அழைத்து வந்திருக்கின்றனர். அதன் பிறகு வந்த கோபி வெளியூர் சென்றதாகவும், அதனால் தான் வீட்டிற்கு வர முடியவில்லை என்று சப்பக்கட்டு கட்டுகிறான்.

முதலில் கோபப்பட்ட கோபியின் அப்பா, அம்மா இருவரும் அதன் பிறகு இவன் இப்படித்தான் என விட்டுவிடுகிறார்கள். மேலும் கோபியின் அப்பா அவனை அடிக்க ஆத்திரத்துடன் கிளம்பினாலும் அவருடைய உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்கவில்லை.

அதன்பிறகு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சகஜமான பின்பு, பாக்யாவிடவும் கோபி, ‘இதெல்லாம் உனக்கு தேவையா! பேசாமல் சமையல் ஆர்டர் செய்து கொடுக்கும் வேலையை விட்டுவிடு, குடும்பம் உண்டு வீடு உண்டு என இருந்து விடு’ என்று பாக்யாவிற்கு அறிவுரை கூறியது மட்டுமல்லாமல் இனி நீ எந்த வேலையும் செய்ய வெளியே போகக்கூடாது என்று கண்டிஷன் போடுகிறான்.

ஒருவேளை பாக்யா தொழிலதிபர் ஆகி விடுவாரோ? என்ற பயத்திலும் அவள் தன்னை மிஞ்சி செயல்பட ஆரம்பித்து விடுவாளோ? என்றும் தன் கையிலே கோபி பாக்யாவை வைத்துக்கொள்ள இந்த சமயத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளப் போகிறான்.

இருப்பினும் கோபி நினைப்பதையெல்லாம் எழில் செயல்படுத்த விடமாட்டான். அம்மாவை எதிர்த்து பேசும் கோபியை எழில் தட்டிக் கேட்பது மட்டுமில்லாமல் அவரை எப்படியாவது திருத்தி குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று போராடி வருகிறார்.

Trending News