வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பொழப்பு சிரிப்பா சிரிக்குது.. ராதிகாவிற்காக அடிதடியில் இறங்கிய கோபி அங்கிள்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மனைவியை எப்படியாவது விவாகரத்து செய்துவிட்டு கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கோபி உறுதியாக இருப்பதால் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய துணிந்து விட்டான். ‘தவளை தன் வாயால் மாட்டிக்கொள்வது போல்’ ராதிகாவிடம் பாக்யா தான் தன்னுடைய மனைவி என்பதை குடித்துவிட்டு உளறியதால், உயிர் தோழியின் வாழ்க்கையை கெடுக்கக் கூடாது என ராதிகா கோபியை அடியோடு வெறுக்கிறாள்.

அத்துடன் தன்னுடைய மனைவி பணத்தாசை பிடித்தவள் என கோபி ராதிகாவிடம் சொன்னதால், பாக்யா பற்றி ஏற்கனவே தெரிந்த ராதிகாவிற்கு இவ்வளவு நாள் பொய் பித்தலாட்டம் செய்து தான் தன்னுடன் பழகி இருக்கிறாரா என அவனுடைய நம்பிக்கை துரோகத்தை மன்னிக்க முடியாமல் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கோபியை மன்னிக்காமல் கழுத்தை பிடித்து ராதிகா வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

இதையெல்லாம் ராதிகாவின் முன்னாள் கணவன் பார்க்க, அதன்பிறகு மறுநாளும் ராதிகா வீட்டிற்கு வந்த கோபி, ராதிகாவின் மகளிடம் அவள் கேட்ட பொருளை வாங்கிக் கொடுப்பதை பார்த்த ராதிகா அந்த பொருளை தூக்கி வீசி மறுபடியும் கோபியை தன் வீட்டிற்குள் நுழைய விடாமல் கழுத்தைப் பிடித்து தள்ளினாள்.

இதை ராதிகாவின் கணவர் ராஜேஷ் மறுநாளும் பார்க்க அதன்பிறகு கோபியிடம் வந்து, ‘என்னைப் போன்றே உன்னையும் வீட்டைவிட்டு அனுப்பி விட்டாளா’ என நக்கல் அடிக்கிறான். கோபத்தின் உச்சிக்குச் சென்ற கோபி, ராஜேஷ் இருவரும் அடித்துக்கொண்டு நடுரோட்டில் சண்டை போடுகின்றனர்.

இதை ஊர் மக்கள் ஒன்று கூடி வேடிக்கை பார்த்தனர். இதன்பிறகு ராஜேஷ் ராதிகாவிடம், ‘என்னை கழட்டி விட்டு கோபியை பிடித்தாய். இப்பொழுது கோபியை கலைத்து விட்டு வேறு ஒருத்தனை பிடிக்கப் போகிறாயா’ என நாக்க புடுங்குற மாதிரி பேசி ஊர்மக்களின் முன்னிலையிலேயே அசிங்க படுத்துகிறான்.

இதைக்கேட்டு தாங்க முடியாத ராதிகா தன்னுடைய இயலாமையை நினைத்து அழுது புலம்புகிறாள். எத்தனை தடவை வீட்டை விட்டு வெளியே சென்றாலும் மறுபடியும் உன்னைத் தேடி வரும் கோபியை நீ இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் எந்த தவறும் இல்லை என ராதிகாவிடம் அவளுடைய அம்மா அடிக்கடி சொல்ல, ஒரு கட்டத்தில் ராதிகாவும் கோபியை மன்னித்து ஏற்றுக் கொண்டு தன்னுடைய மகளுக்காக அவனை இரண்டாவது திருமணம் செய்து கொள்வாள்.

Trending News