புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஈஸ்வரியை காப்பாற்றிய பாக்கியாவிற்கு கோபி கொடுக்கும் டார்ச்சர்.. தோற்ற அவமானத்தில் சவால் விடும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி, கோபியை தலை முழுகியதால் துவண்டு போன கோபி ராதிகா வீட்டிற்கு போகிறார். போனதும் ஆக்ரோஷமாக பொங்குவார் என்று எதிர்பார்த்தால் நடந்த விஷயத்தை ராதிகாவிடம் சொல்லி புலம்பித் தவிக்கிறார். இதுவரை எவ்வளவோ விஷயங்கள் நடந்திருக்கிறது ஆனாலும் என்னுடைய அம்மா எனக்கு தான் சப்போட்டா இருந்திருக்கிறார்.

ஆனால் இந்த விஷயத்தில் நான் பண்ணின துரோகத்தினால் என்னை மன்னிக்க மாட்டேன் என்று இனி என் பிள்ளையை இல்லை என சொல்லி தலைமுழுகி விட்டார் என ராதிகாவிடம் கண்ணீர் வடித்து பேசுகிறார். பிறகு கோபியை சமாதானப்படுத்தும் விதமாக ராதிகா ஆறுதல் படுத்துகிறார். அடுத்ததாக பாக்யா, ராதிகா மற்றும் மயுவை பார்க்கிறார்.

எவ்வளவு பட்டாலும் திருந்தாத கோபி

பார்த்ததும் மயூ ரொம்ப நல்ல பொண்ணு, அவள் பெயரில்தான் அர்ச்சனை பண்ணிட்டு வருகிறேன் என்று பாக்யா ,ராதிகாவிடம் சொல்கிறார். அதற்கு நீங்கள் என் மகளை என் அனுமதியில்லாமல் கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்தது தப்பு. மயு உங்களிடம் நடந்த உண்மையை சொன்னதும் நீங்கள் என்னிடம் சொல்லி இருந்தீர்கள் என்றால் நானே கேசை வாபஸ் வாங்கி இருப்பேன்.

ஆனா படிக்கிற பொண்ண இப்படி கோர்ட் கேஸ் என்று கூட்டிட்டு வந்து ரொம்ப தப்பு பண்ணி விட்டீர்கள். இனியாவுக்கு இப்படி ஒரு நிலைமை இருந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா. எல்லாம் காலம் பதில் சொல்லும் என்று ஈஸ்வரி கேசில் தோற்றுப் போன அவமானத்தில் பாக்கியாவிடம் ராதிகா சவால் விட்டு போகிறார்.

அடுத்ததாக சமையல் போட்டி நடக்கிறது என்று பழனிச்சாமி, பாக்கியா வீட்டிற்கு வந்து பாக்யாவை கலந்து கொள்ள சொல்கிறார். அதற்கு பாக்கியா நான் எப்படி இதில் கலந்துகொள்ள என்று யோசிக்கிறார். உடனே ஈஸ்வரி, நீ இதில் கலந்து ஜெயித்து ஆக வேண்டும் என்று ஊக்கப்படுத்தி பேசுகிறார். பிறகு பாக்கியா சரி என்று போட்டியில் பெயர் கொடுத்து சமையல் நிகழ்ச்சிக்கு தயாராகி விட்டார்.

அதே மாதிரி கோபியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெயிப்பதற்கு ஆசைப்படுகிறார். ஆனால் பாக்கியா கலந்து கொள்கிறார் என்று தெரிந்ததும் பாக்கியாவுடன் மோத நினைக்கிறார். ஈஸ்வரி பிரச்சனையில் பாக்யா எந்த அளவிற்கு மெனக்கெடு எடுத்து காப்பாற்றி இருக்கிறார் என்று கோபி ஓரளவுக்கு புரிந்திருப்பார்.

அந்த வகையில் பாக்கியாவின் அருமையும் குடும்பத்தை எப்படி பார்த்துக் கொள்கிறார். அம்மாவுக்கு ஒரு இக்கட்டண சூழ்நிலையில் கை கொடுத்திருக்கிறார் என்று ஒரு நல்ல அபிப்பிராயம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மறுபடியும் பாக்கியவுடன் மோதும் விதமாக சமையல் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாக்கியாவிற்கு எதிராக ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

அதன்படி ஈஸ்வரிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பண்ண சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி, இந்தப் போட்டியில் பாக்கியதான் ஜெயிப்பார் என்று கோபியை நோஸ்கட் பண்ணி விடுகிறார். இதையெல்லாம் தொடர்ந்து எப்படியாவது பாக்கியவை தோற்கடித்து அவமானப்படுத்த வேண்டும் என்று கோபி நடக்கப் போகும் சமையல் நிகழ்ச்சியில் டார்ச்சர் கொடுக்கப் போகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்

Trending News