Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் கதை பெருசாக சொல்லும்படி இல்லாமல் அரைச்ச மாவு அரைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் கிட்டத்தட்ட 1300 எபிசோடுக்கு மேல் கொண்டு வந்து பார்ப்பவர்களை எரிச்சல் படுத்தும் விதமாக தான் கதை இருக்கிறது. ஆனால் யார் என்ன சொன்னாலும் பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் கொஞ்சம் நாளைக்கு ஓடும் என்பதற்கு ஏற்ப புதுசு புதுசாக கதையை கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் செல்வி மகன் ஆகாஷ் இனியா காதல் விவகாரம் வந்தது. தற்போது பாக்கியா வைத்திருக்கும் ரெஸ்டாரண்டை சுதாகர் என்னும் தொழில் அதிபர் வாங்கி அவருடைய ஹோட்டலை நடத்துவதற்காக பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. அதனால் பாக்கியா ஹோட்டலுக்கு வந்து சுதாகரின் ஆட்கள் அனைவரும் ஹோட்டலை விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பாக்கியா அதெல்லாம் தர முடியாது என்று சொல்லி அவர்களை வெளியே அனுப்பி விடுகிறார். பிறகு எழில் மறுபடியும் ஒரு படம் இயக்கப் போவதாக அம்மாவிடம் சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். எப்பொழுதும் சுதாகரின் நாட்கள் வந்து ரெஸ்டாரண்டை கேட்டு பிரச்சினை பண்ணுகிறார்கள். பிறகு பாக்கியா ரெஸ்டாரண்டை கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் என்ற காரணத்திற்காக சுதாகர் நேரடியாக பாக்யாவின் வீட்டிற்கு போகிறார்.
அங்கே போனதும் பாக்கியாவின் ஹோட்டலுக்கு பணத்தை கொடுப்பதற்கு சுதாகர் டீல் பேசுகிறார். ஆனால் பாக்யா, முடியவே முடியாது, உங்களால் என்ன பண்ண முடியுமோ பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி சுதாகரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். இதனால் கோபத்தில் இருக்கும் சுதாகர், பாக்யாவின் குடும்ப சூழ்நிலையை பற்றி விசாரிக்க சொல்கிறார். அப்படி விசாரித்த பொழுது பாக்யாவின் வீட்டுக்காரர் கோபி கருத்து வேறுபாடு காரணமாக தனியாக இருக்கிறார்.
அவரும் ஒரு ஹோட்டல் வைத்து நடத்துகிறார் என்ற விஷயத்தை சுதாகர் தெரிந்து கொள்கிறார். அதற்காக கோபி நண்பர் ஒருவர் சுதாகரின் கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்பதற்காக அவர் மூலமாக கோபியை சந்தித்து பேசலாம் என்று சுதாகர் முடிவெடுத்து விடுகிறார். அந்த வகையில் பாக்யாவின் ஹோட்டல் பிரச்சினை கோபிக்கு தெரிய வரப்போகிறது.
ஆனாலும் கோபி, பாக்யாவுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக ஹோட்டல் பிரச்சனையில் ஆதரவாக இருந்தால் நிச்சயம் பாக்யா கோபி ஒன்று சேர்வதற்கு இது ஒரு வாய்ப்பாக கூட அமையும். அடுத்ததாக இனியா ஆசைப்பட்ட மாதிரி வேலையில் சேர்ந்து விட்டார் என்பதற்காக ஈஸ்வரி, இனியாவுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று கோபியிடம் சொல்கிறார். கோபியும் சரி என்று சொல்லியதால் அடுத்து இனியாவின் கல்யாண ட்ராக் வரப்போகிறது.