வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

ஈஸ்வரிக்கு ஏற்பட்ட அவமானத்தால் கோபிக்கு கிடைத்த தண்டனை.. பாக்கியாவுடன் மோத போகும் ராதிகாவின் புருஷன்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரி வெளியே வந்ததும் பாக்கியா குடும்பம் ஒட்டுமொத்த சந்தோசத்துடன் வீட்டிற்கு போகிறார்கள். ஆனால் கோர்ட்டில் அனைவரது முன்னாடியும் அவமானப்பட்ட ராதிகா, வீட்டிற்கு போய் உக்கிரமாக இருக்கிறார். அத்துடன் இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் அம்மா தான் என்று ராதிகா அவருடைய அம்மாவை திட்டி தீர்க்கிறார்.

எல்லாத்தையும் கண்ணால் பார்த்த மாதிரி கோபி அம்மா தான் என்னை கீழே பிடித்து தள்ளிவிட்டார்கள் என்று சொல்லி என்னை நம்ப வைத்து விட்டாய். உன் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணிக்கிட்டு போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் கொடுத்த. இப்போ எங்க வந்து என்னை நிறுத்தி இருக்கிறது தெரியுமா? இனி நான் கோபி முகத்தில் எப்படி முழிப்பேன் என்று கமலாவை ராதிகா திட்டுகிறார்.

பாக்கியா உடன் மோத போகும் கோபி

அதற்கு கமலா, நீயும் தான் என்னை அவங்க பின்னாடி இருந்து தள்ளி விட்டாங்க என்று சாட்சி சொன்னாய். அப்போ நீ தானே பொய் சொல்லி இருக்கிறாய் என்று ராதிகா மீது தவறு இருப்பது போல் கமலா கூறுகிறார். இதை கேட்ட ராதிகா நீ என்ன அப்படி சொல்லி நம்ப வைத்து விட்டாய். நானும் முட்டாள்தனமாக உன்னை நம்பி இவ்வளவு தூரத்துக்கு போனது என்னுடைய தப்புதான் என்று கத்துகிறார்.

அப்பொழுது ராதிகாவின் அம்மா, மயூவை பார்த்து திட்டுகிறார். உனக்கு என்ன தெரிஞ்சாலும் நீ ஏன் கோர்ட்டுக்கு வந்து சொன்னாய். என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாமல் நீ எப்படி பாக்கியா கூட வரலாம். எது நடந்தாலும் என்னிடம் தானே சொல்லி இருக்கணும் என்று மயூவை திட்டுகிறார். அதற்கு ராதிகா அவளை ஏன் நீ திட்டுகிறாய். அவள் நடந்ததுதான பார்த்து சொல்லி இருக்கிறாய் என்று சொல்லி கோபத்துடன் போய்விடுகிறார்.

கோபமாக இருக்கும் ராதிகாவை சமாதானப்படுத்த போன மயு, ராதிகாவிடம் மன்னிப்பு கேட்கிறார். அதற்கு ராதிகா, இங்கே என்ன பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது என்று உனக்கு தெரியும். அப்படி இருக்கும் பொழுது உனக்கு தெரிந்த விஷயத்தை நீ என்னிடம் முதலில் சொல்லி இருக்கலாம் என்று மயுடன் கேட்கிறார். அதற்கு மயூ நானும் சொல்ல வந்தேன். ஆனால் நீங்கள் எல்லாரும் கோபமாக இருந்ததனால் பயந்து போயிட்டு எதுவும் சொல்ல முடியவில்லை என்று சொல்கிறார்.

அடுத்ததாக கோபி, வழக்கம்போல் ஒயின்ஷாப்புக்கு போயிட்டு குடித்துவிட்டு நண்பரிடம் புலம்புகிறார். இந்த ராதிகா வந்ததுக்கு அப்புறம் என்னுடைய சந்தோசம் நிம்மதி எல்லாமே போய்விட்டது. எப்படி இருந்த என் குடும்பம் இந்த நிலைமைக்கு ஆயிருக்கிறது என்றால் நான் எப்பொழுது ராதிகாவுடன் சேர்ந்தேனோ, அப்பொழுதே எல்லாம் பாழாகி விட்டது என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார்.

இதனை தொடர்ந்து பாக்யா, ஈஸ்வரிக்கு பிடித்த சாப்பாடு செய்து அவரை சந்தோஷமாக வைக்க முயற்சி எடுக்கிறார். அந்த வகையில் அனைவரும் ஒன்றாக இருந்து சாப்பிடும் பொழுது ஈஸ்வரிக்கு பிடித்த சாப்பாடு என்று சொல்லி பாக்யா பரிமாறுகிறார். அப்பொழுது அம்மா என்ற ஏகத்துடன் கோபி வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். கோபியை பார்த்ததும் ஈஸ்வரி கோபப்படுகிறார்.

அப்பொழுது அம்மாவிடம் மன்னிப்பு கேட்ட கோபிக்கு ஈஸ்வரி கொடுத்த தண்டனை, நீ இனிமேல் என்னுடைய பிள்ளையே கிடையாது. என் வயிற்றில் நீ பிறக்கவே இல்லை, எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை தான் அது பாக்கியா தான் என்று சொல்லி தலைமுழுகி கொள்கிறார். இதை கேட்டு கோபி அதிர்ச்சியாகி என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழிக்கிறார்.

இதே கோபத்துடன் வீட்டிற்கு போய் ராதிகாவுடன் கோபி சண்டை போடுவார். ஆனால் வழக்கம் போல் ராதிகாவும் விட்டுக் கொடுக்காமல் கோபியுடன் வாக்குவாதம் பண்ண ஆரம்பித்து விடுகிறார். இதனைத் தொடர்ந்து இன்னும் சில நாட்களில் சமையல் போட்டி நிகழ்ச்சி ஒன்று ஆரம்பமாக போகிறது. அதில் பாக்யா கலந்து கொள்கிறார் என்று தெரிந்ததும், கோபியை தூண்டிவிட்டு ராதிகா அதில் கலந்து கொள்ள சொல்கிறார். அந்த வகையில் பாக்கியா மற்றும் கோபி சமையல் நிகழ்ச்சியில் மோத போகிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News