சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ராதிகா கையை பிடித்து பாக்கியான்னு உளறிய கோபி.. மகனை தன் வீட்டுக்கு கூட்டிட்டு வர பிளான் பண்ணும் ஈஸ்வரி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை பார்ப்பதற்காக ராதிகா ஹாஸ்பிடல் வருகிறார். ஆனால் எந்த காரணத்தை கொண்டும் என் மகனை பார்க்க விடமாட்டேன் என்று ஈஸ்வரி வாசலில் நின்று ராதிகாவை தடுத்து அவமானப்படுத்தி பேசுகிறார். போதாதருக்கு இனியாவும் சேர்ந்து ராதிகாவை பார்க்க கூடாது என்று வாய்க்கு வந்தபடி உலறுகிறார்.

இதையெல்லாம் பார்த்த பாக்கியா, ராதிகாவுக்கு தான் எல்லா உரிமையும் இருக்கிறது. அவங்கள பார்க்க கூடாதுன்னு சொல்றதுக்கு நமக்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சப்போர்ட் பண்ணி ஈஸ்வரிடம் பேசுகிறார். ஆனால் ஈஸ்வரி, பாக்யாவை உன் வாயை மூடு எனக்கு எல்லாம் தெரியும். உள்ளே நெஞ்சு வலியால் படுத்திருப்பது என்னுடைய மகன் என்று பாக்யா மற்றும் ராதிகாவிடம் கோபமாக பேசுகிறார்.

பிறகு பாக்யா, ஈஸ்வரி எதுவுமே சாப்பிடவில்லை உடம்புக்கு ஒத்துக்காது என்று சொல்லி எழிலை கேண்டினுக்கு கூட்டிட்டு போக சொல்கிறார். அப்படி போகும் பொழுது ஈஸ்வரி, இனியாவிடம் நான் போனதற்குப் பிறகு இந்த ராதிகாவை உள்ளே விட்டு விடக்கூடாது என்று காவலுக்கு நிறுத்தி விட்டுட்டு போகிறார். அதன் பின் பாக்கியா, ராதிகாவை கோபியை பார்க்க சொல்லுகிறார்.

ஆனால் இனியா போகக்கூடாது என்று தடுக்கும் பொழுது பாக்கியா உன் வயசுக்கு மீறி தேவையில்லாத வேலையை பார்க்காத, வாய் மூடிட்டு அமைதியா இரு என்று சொல்லி விடுகிறார். உடனே ராதிகா, என் புருஷனை பார்ப்பதற்கு இத்தனை பேர் தடங்கள் பண்ணி நீங்க சிபாரிசு பண்ணி பார்க்கும் அளவிற்கு ஆகிவிட்டது என்று நொந்து பேசுகிறார். அதற்கு பாக்கியா எல்லாத்துக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது.

நீங்கள் கோபியை பார்க்கணும் பேசணும் என்று நினைத்தால் இப்பொழுது பேசிட்டு வாங்க என்று சொல்லிவிடுகிறார். உடனே ராதிகா, கோபியை பார்ப்பதற்கு ரூமுக்குள் போகிறார். அப்பொழுது கோபிக் கையை பிடித்து கோபி என ராதிகா கூப்பிடுகிறார். உடனே கோபி கண் முழித்ததும் அவருடைய நினைவுக்கும் கண்ணுக்கும் பாக்கியா இருப்பது போல் தான் தெரிகிறது.

அப்பொழுது கோபி, ரொம்ப நன்றி உன் உதவியை நான் மறக்கவே மாட்டேன் பாக்கியா என்று பாக்கியாவை நினைத்து பீல் பண்ணி பேச ஆரம்பிக்கிறார். கோபி பாக்கியாவின் பெயரை சொன்னதும் ராதிகா அந்த நிமிஷமே மொத்தமாக உடைந்து போய்விட்டார். எதுவும் பேச முடியாமல் அமைதியாக ராதிகா நிற்கிறார். அந்த சமயத்தில் உள்ளே நுழைந்த ஈஸ்வரி, ராதிகாவை இழுத்து வெளியே தள்ளி விடுகிறார்.

உடனே ராதிகா, பாக்கியாவை பார்த்து புலம்புகிறார். நான் உள்ள போய் பேசும் பொழுது கோபி உங்க பெயரை தான் சொல்லுகிறார். நான் யாருக்கும் எந்த தவறும் பண்ணவே இல்லை. எல்லா விஷயத்திலும் நேர்மையாக தான் நடந்து கொள்கிறேன். ஆனால் எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை ஏன் என்று தெரியவில்லை. நான் கோபியை கல்யாணம் பண்ணினதே தவறுதான் என்று ஃபீல் பண்ணுகிறார்.

இதற்கு பாக்கியா ஆறுதல் சொல்லிய நிலையில் வீட்டிற்கு கிளம்பி விடுகிறார். பிறகு வீட்டிற்கு வந்த ஈஸ்வரி, நீ ஏன் ஹாஸ்பிடலுக்கு வரவில்லை என்று கேட்கிறார். அதற்கு நான் ஏன் வரவேண்டும், நான் என்ன அவருடைய மனைவியாக என்று கேட்டு ஈஸ்வரியின் வாயை அடைக்கிறார். பிறகு என் மகனை யாரும் பார்த்துக் கொள்ள வேண்டாம்.

நானே பார்த்துக் கொள்வேன், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று சொல்லிய நிலையில் கோபியை மறுபடியும் எப்படியாவது பாக்கியா வீட்டிற்கு கூட்டிட்டு வரவேண்டும் என்று ஈஸ்வரி நினைக்கிறார். அதன்படி பாக்கியாவிடம் பிடிவாதமாக சண்டை போட்டு கோபியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடுவார்.

பிறகு மறுபடியும் முதலில் இருந்தா என்ற சொல்வதற்கு ஏற்ப கோபி, பாக்கியா வீட்டிலேயே இருக்கப்போகிறார். ஆனால் இந்த முறை பாக்யாவை பற்றி புரிந்து கொண்டு கோபி திருந்தி வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி என்றால் ராதிகா மற்றும் மயூவின் நிலைமை என்னவாக இருக்கும் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

Trending News