சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

50 வயதில் புது மாப்பிள்ளையாக போகும் கோபி.. பட்டுச்சேலை கட்டிக்கொண்டு தயாரான பாக்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது பல சுவாரசியமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இனியாவிற்காக பாக்யா கோபி வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் மறுநாள் கோபி, பாக்யா விவாகரத்து வழக்கு கோர்ட்டுக்கு வர உள்ளது. இதனால் பாக்கியா புதுப்பெண் போல பட்டுச் சேலை கட்டிக்கொண்டு, அலங்காரம் செய்துகொண்டு காலையிலேயே கிளம்பி விட்டார். உடனே ஈஸ்வரி, கோயிலுக்கு போறியா பாக்யா என கேட்கிறார்.

ஆனால் பாக்கியா கோர்ட்டுக்கு போகிறேன் என எல்லோர் முன்னிலையிலும் கூறுகிறார். உடனே எழில் அங்கெல்லாம் போக வேணாம் என தடுக்கிறார். ஆனால் உங்க அப்பா கேட்டதை கொடுக்கணும் இல்ல எழிலு என பாக்கியா கூறுகிறார். ஒட்டுமொத்த குடும்பமே எவ்வளவோ பாக்கியாவை தடுக்க முயன்றும் தான் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளார்.

இதையெல்லாம் பார்த்து பித்து பிடித்தவர் போல் நிற்கிறார் கோபி. மேலும் பாக்யா தனது மாமனாரிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு கிளம்புகிறார். இதனால் கோர்ட்டில் பாக்கியா எல்லோர் முன்னாலும் என்ன சொல்லப்போகிறார் என்று மொத்த குடும்பமும் பயத்தில் உள்ளனர்.

மேலும் கோபி, பாக்கியா இருவரும் கோர்ட்டுக்கு செல்கின்றனர். அங்கு கண்டிப்பாக பாக்யா விவாகரத்திற்கு சம்மதிப்பார். இதனால் விவாகரத்து கிடைத்துவிட்டது என்று ராதிகா குடும்பத்திடம் கோபி சொன்னால் அவர்கள் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப் படுத்துவார்கள்.

சொல்லப்போனால் பாக்கியாவே ராதிகாவிடம் போய் கோபியை திருமணம் செய்துகொள்ள கேட்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் ராதிகா திருமணத்திற்கு ஒத்துக் கொண்டால் தற்போது 50 வயதில் புதுமாப்பிள்ளை கோபி தான் நினைத்ததை முடித்துக் கொள்வார்.

Trending News