புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மகனை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடப்போகும் கோபி.. மொத்த பழியையும் பாக்யா மேல் போட்ட மாமியார்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரி எழிலுக்கு கொடுத்த டார்ச்சரை தடுக்க முடியாத பாக்கியா எழிலை வீட்டை விட்டு போக சொல்லி விட்டார். எழிலும் அம்மா சொன்னா எதுனாலும் சரியாகத்தான் இருக்கும் என்றும், இதுதான் சான்ஸ் இந்த பாட்டி ஈஸ்வரிடம் இருந்து தப்பித்து விடலாம் என நினைத்து பொண்டாட்டி பிள்ளைகளை கூட்டி வெளியே வந்து விட்டார்.

ஆனால் போகிறதுக்கு எந்த இடமும் தெரியாததால் தற்சமயத்தில் ஹோட்டலில் தங்கிக் கொள்ளலாம் என்று அமிர்தாவை கூட்டிட்டு ஹோட்டலுக்கு போகிறார். பாக்யா, எழில் போனதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கும் அந்த நேரத்தில் ஈஸ்வரி என்னமோ எல்லா பிரச்சனையும் பாக்கியா தான் பண்ணியிருக்கிறார் என்பது போல் திட்டுகிறார்.

கோபி போட்ட கணக்கு சுக்கு நூறாக உடைத்த எழில்

நீ எதுக்கு அவனை வீட்டை விட்டு அனுப்பினாய், நான் பாட்டியாய் என் பேரனை கண்டிக்க கூடாதா? நான் எது சொன்னாலும் அவனுடன் நல்லதுக்காக தானே இருக்கும். அதை ஏன் எல்லோரும் புரிஞ்சுக்க மாட்டீங்க. சினிமா சினிமானு சுத்திகிட்டு வந்து வாழ்க்கை இழந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் கொஞ்சம் கண்டிப்புடன் இருந்தேன்.

அதே மாதிரி அமிர்தா மற்றும் எழிலுக்கு ஆதாரமாக ஒரு குழந்தை இருந்தால் தான் கணேஷ் தொந்தரவு பண்ணவும் மாட்டான் என்பதற்காக தான் சொன்னேன் என ஈஸ்வரி தற்போது நீலி கண்ணீர் வடித்து தன் மீது எந்தத் தவறும் இல்லை என்பது போல் டிராமா பண்ணுகிறார். இதையும் காது கொடுத்து கேட்டு அனைவரும் மௌனமாக நிற்கிறார்கள்.

கடைசியில் தன் மீது எந்தத் தவறும் இல்லை எல்லா தவறும் பாக்கியா மீது தான் இருக்கிறது என்பது போல் மொத்த பழியையும் தூக்கி போட்டு விட்டார். இந்த மாதிரி ஒரு கேரக்டருக்கு ராதிகா தான் சரியான ஆளு என்றும், இதற்கு பேசாமல் ஈஸ்வரி ஜெயிலுக்கே போய் இருக்கலாம். அடுத்ததாக இனியா, கோபிக்கு போன் பண்ணி எழில் அண்ணா வீட்டை விட்டு போய்விட்டார் என்று சொல்கிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியான கோபி, ஏன் என்னாச்சு என்று கேட்கும் பொழுது இனியா அம்மா தான் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார் என்று அரைகுறையாக பத்த வச்சு விட்டார். உடனே வழக்கம் போல் கோபி, பாக்யாவை திட்டி விட்டு எழிலை பார்த்து பேசுவதற்காக ஹோட்டலுக்கு போகிறார். போன இடத்தில் அமிர்தா மற்றும் நிலா பாப்பாவுடன் அன்பாக பேசி அரவணைப்புடன் நடந்து கொள்கிறார்.

அடுத்ததாக இவர்கள் அனைவரையும் வீட்டுக்கு கோபி கூப்பிடுகிறார். என்னோடு வீடு இருக்கும் போது நீ ஏன் இந்த மாதிரி ஹோட்டலில் இருக்க வேண்டும். என்னுடன் கிளம்பி வா என்று பாசமாக கூப்பிடுகிறார். ஆனால் இதற்கு எல்லாம் அசராத எழில், கோபியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி நோஸ்கட் பண்ணி விடுகிறார். எப்படியாவது வெளியிலே தன்னுடன் கூட்டிட்டு போய் குடும்பமாக சேர்ந்து நாம் சந்தோஷமாக இருந்து பாக்யாவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் இன்று கோபி நினைத்தார். ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் உஷாராகி எழில் தப்பித்துக் கொண்டார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News