Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், உனக்கு ஒரு கும்பிடு உங்க குடும்பத்துக்கு ஒரு கும்பிடு என்று ராதிகா, கோபி வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டார். அந்த வகையில் ஈஸ்வரிடம் உங்க பிள்ளையை உங்களிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று நான் என்னைக்கும் நினைச்சதே இல்லை. அந்த அளவுக்கு நான் மோசமான ஒரு கேரக்டரும் கிடையாது.
ஆனால் எப்பொழுது நான் கோபியை கல்யாணம் பண்ணினேனோ அப்பொழுதே என்னுடைய கேரக்டர் மொத்தமாக அசிங்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு நாளும் உங்களிடமும் உங்கள் குடும்பத்திடமும் நான் போராடி நொந்து போய்விட்டேன். அது மட்டுமல்ல கோபி என்னுடன் இருக்கும் பொழுது சிரிப்பு என்றால் என்ன நிம்மதி என்றால் என்னவென்று தெரியாத அளவுக்கு தான் இருந்தார்.
ஆனால் இங்கே வந்த பிறகு அவருடைய நிம்மதியும் சந்தோஷத்தையும் பார்த்து எனக்கே வியப்பாக இருந்தது. அந்த அளவிற்கு கோபிக்கு உங்க குடும்பத்தின் மீது பாசம் இருக்கிறது. அதனால் இப்படிப்பட்ட கோபியை நான் கூட்டிட்டு போய் அவரும் சந்தோசம் இல்லாமல் நானும் கஷ்டப்பட்டு இருப்பதற்கு அவர் இங்கே இருப்பது தான் சரியாக இருக்கும் என்று ஈஸ்வரிடம் சொல்லிவிடுகிறார்.
அத்துடன் இனியாவிடம் நீ ஆசைப்பட்ட மாதிரி உங்க அப்பா இங்கே உன் கூட இருக்கப் போகிறார். நான் உன்னிடம் இருந்து உங்க அப்பாவை பிரிக்கவில்லை என்று ராதிகா சொல்லிவிட்டார். அத்துடன் பாக்கியாவிடமும் நான் தெரிஞ்சோ தெரியாமலோ உங்களுக்கு நிறைய கஷ்டத்தை கொடுத்திருக்கிறேன். அதற்கெல்லாம் சேர்த்து வைத்து என்னை மன்னித்து விடுங்கள். என்னுடைய வாழ்க்கையில் நான் எப்போலாம் கஷ்டப்படுகிறேனோ அப்பொழுதெல்லாம் என் கூடவே இருந்துருக்கீங்க ரொம்ப நன்றி என கூறுகிறார்.
இப்படி கோபி குடும்பத்தில் இருப்பவர்களிடம் பேசிவிட்டு ராதிகா மயூவை கூட்டிட்டு வெளியே போய் விடுகிறார். பிறகு ராதிகாவை பார்க்க போகும் கோபியிடம் இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து இந்த வீட்டுக்கும் வராதீங்க எங்களையும் பார்த்து பேச வேண்டும் என்று முயற்சி செய்யாதீங்க என்று சொல்லி கோபியை தலைமுழுகி விட்டார். ராதிகா வாழ்க்கையில் எடுத்த உருப்படியான முதல் நல்ல விஷயம் என்றால் இதுதான்.
அந்த வகையில் கோபிடமிருந்து தப்பிக்கும் அளவிற்கு ராதிகா உஷார் ஆகிவிட்டார். இதனை தொடர்ந்து செண்டிமெண்டில் பாசத்தை கொட்டி தீர்த்த ஈஸ்வரிக்கு தான் இனி ஆப்பு இருக்கிறது. அதாவது இனி ஈஸ்வரி ஆசைப்பட்ட மாதிரி கோபி பாக்கியா வீட்டிலேயே இருந்தாலும் பாக்கியாவுக்கு இதற்கு துளி கூட விருப்பம் இருக்காது.
அதனால் மொத்த கோப்பத்தையும் காட்டும் விதமாக பாக்கியா கோபி இந்த வீட்டில் இருக்கிறார் என்றால் நான் வீட்டை விட்டு போகிறேன். நீங்கள் குடும்பமாக ஒன்றாக இருந்து கொள்ளுங்கள் என்று பாக்யா அதிரடியாக சொல்லப் போகிறார். ஆனால் கோபி இல்லாமல் கூட ஈஸ்வரி இருந்து விடுவார், பாக்கியா இல்லாமல் இருக்க முடியாது. அதனால் வேறு வழியே இல்லாமல் கோபி பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்.