செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பாக்யாவிடம் மயங்கிய கோபி.. கொந்தளிக்கும் இரண்டாம் பொண்டாட்டி

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது மூர்த்திக்கு கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்ட விஷயம் தெரிய வருகிறது.

இதைப் பற்றி எழில் எல்லா விஷயத்தையும் சொன்னவுடன் மூர்த்தி கண் கலங்குகிறார். இது ஒருபுறம் இருக்க ராதிகா, உடனே ஊருக்கு போகலாம் எனக்கு இந்த அவமானம் தேவையா என கோபியிடம் சண்டை போடுகிறார். கோபி காலில் விழாத குறையாக ராதிகாவை சமாதானப்படுத்தி வைத்துள்ளார்.

Also Read :சந்தகட போல் மாறிய பிக்பாஸ் வீடு .. மொத்த வெறுப்பையும் சம்பாதிக்த போட்டியாளர்கள்

மேலும் இரவு நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மற்றும் பாக்கியலட்சுமி குடும்பம் இணைந்த ஆட்டம் பாட்டம் என கொண்டாடுகிறார்கள். அப்போது கோபி மற்றும் ராதிகா இருவரும் அங்கு வந்து அமருகிறார்கள். அப்போது இனியா அம்மாவை பாட சொல்லுங்கள் என்று கூறுகிறார்.

உடனே கோபி மனதில் கழுதை கத்துற மாதிரி இருக்கும் என நினைத்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் கோபிக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக பாக்யா சூப்பராக பாடுகிறார். மேலும் பாக்யாவின் பாடலில் மயங்கி கோபி கைதட்டுகிறார். இதை அருகில் இருந்த ராதிகாவும் பார்க்கிறார்.

Also Read :ஜி பி முத்துவை கார்னர் செய்யும் 4 போட்டியாளர்கள்.. ஸ்கெட்ச் போட்டு துரத்த காத்திருக்கும் ஆர்மி

என் முன்னாடியே பாக்யா பாட்டை ரசிக்கிறீங்களா என கோபமாக ராதிகா அங்கிருந்து செல்கிறார். ரெண்டு பொண்டாட்டிகாரன் படும் பாட்டாக கோபி அங்கும் இங்கும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இதனால் ராதிகா கோபியின் மீது மிகுந்த கோபத்தில் கொந்தளிக்க உள்ளார்.

இனிமேல் கோபி வாழ்க்கை முழுவதும் ராதிகாவை சமாதானம் செய்வதே வேலையாக மாறவுள்ளது. முன்பெல்லாம் பாக்யாவை அதட்டி உருட்டி வேலை வாங்கும் கோபிக்கு இது கண்டிப்பாக தேவை தான் என ரசிகர்கள் வசைப்பாடி வருகிறார்கள். இவ்வாறு பல சுவாரஸ்யமான கதைகளத்துடன் மகா சங்கமம் தொடர்ந்து ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read :ஹனிமூனில் அசிங்கப்பட்ட ராதிகா.. முழு சுயரூபத்தை காட்டிய கோபி, மகா சங்கடமான தருணம்

Trending News