Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா, மாமனாரின் பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று செழியன் மூலம் கோவிலில் மிகப்பெரிய ஏற்பாட்டை செய்துவிட்டார். அந்த வகையில் குடும்பத்துடன் கோவிலுக்கு போன அனைவரும் ஏற்பாடு மிகப் பிரமாண்டமாக இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டு சந்தோஷப்பட்டு கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து ஈஸ்வரி மற்றும் தாத்தாவுக்கு செய்ய வேண்டிய அனைத்து சம்பிரதாயங்களும் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக எழில், அமிர்தா மற்றும் நிலா பாப்பாவை கூட்டிட்டு தாத்தாவின் பங்க்ஷனில் கலந்து கொள்வதற்கு வந்து விடுகிறார். இவர்களை பார்த்த சந்தோஷத்தில் பாக்யா குடும்பம் ஒட்டுமொத்தமாக இணைந்து ஒரு குடும்பமாக அந்த நிகழ்ச்சியை சிறப்பித்து வருகிறார்கள்.
ராதிகா சொல்லி கேட்காமல் போன கோபிக்கு ஏற்பட்ட அசிங்கம்
அடுத்ததாக கோபி, அனைவரும் சேர்ந்து எங்கு போகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு செழியனுக்கு போன் பண்ணி கொண்டே இருக்கிறார். ஆனால் செழியன், கோபி ஃபோனை நிராகரித்த பொழுதும் தொடர்ந்து போன் பண்ணி டார்ச்சர் பண்ணியதால் செழியன் போன் அட்டென்ட் பண்ணி விடுகிறார்.
அப்பொழுது என்ன விசேஷம் எல்லாரும் சேர்ந்து எங்க போய் இருக்கீங்க என்று கோபி கேட்கிறார். உடனே செழியன் இன்று எங்க தாத்தாவின் எண்பதாவது பிறந்த நாள் என்று சொல்லுகிறார். அது கூட உங்களுக்கு ஞாபகம் வச்சுக்க முடியாத அளவுக்கு நீங்க பிஸியாக இருக்கீங்க என்று கேட்கிறார். உடனே கோபி நான் சுத்தமாக மறந்து விட்டேன், எல்லோரும் எந்த கோவிலில் இருக்கீங்க என்று விசாரிக்கிறார்.
அதற்கு செழியன் எல்லா விஷயங்களையும் சொல்லி விடுகிறார். உடனே அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதுவும் நான் தான் என் வீட்டுக்கு மூத்த பிள்ளை ஆண் சிங்கம் நான்தான் அதை எடுத்து நடத்த வேண்டும் என்று ராதிகாவிடம் தெனாவட்டாக சொல்கிறார். உடனே ராதிகா, அப்படி என்றால் ஏன் உங்க அப்பாவின் பிறந்தநாளை மறந்தீர்கள்.
உங்களுக்கு ஞாபகம் இல்லாத விஷயத்தை கூட பாக்யா ஞாபக வைத்து அதை பண்ணி வருகிறார். ஆனாலும் ஏன் பாக்யாவை நீங்கள் திட்டுகிறீர்கள். நீங்கள் ஏன் அவங்க விஷயத்தில் தலையிடுகிறீர்கள் என்று கோபி இடம் கோபமாக பேசுகிறார். உடனே நீ ஏன் எனக்கு சப்போர்ட் பண்ணாமல் அவங்களுக்கு எப்ப பாத்தாலும் சப்போர்ட்டாக பேசுகிறாய் என்று கேட்கிறார்.
அத்துடன் நாம் இருவரும் சேர்ந்து கோவிலுக்கு போயிட்டு அப்பா அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வரலாம் வா என்று கூப்பிடுகிறார். உடனே ராதிகா, நம்ம போனாமட்டும் அங்க மரியாதை கொடுத்து பேசிடுவாங்களா என்ன? பேசாமல் இருந்தால் கூட பரவாயில்லை, அவமானப் படுத்தாமல் ஆவது இருக்கணும். ஆனால் அவர்கள் நம் போனாலே அசிங்கப்படுத்தி தான் அனுப்புவார்கள்.
இதற்கு நான் வேற வரணுமா நாலாம் வர முடியாது என்று சொல்கிறார். உடனே கோபி அப்படி என்றால் நான் போயிட்டு வருகிறேன். என் பேச்சைக் கேட்காமல் நீங்களும் போங்க, உங்களுக்கும் அங்கு அவமானமும் அசிங்கம் தான் ஏற்படுத்தி வெளியே அனுப்பப் போகிறார்கள் என்று சாபம் விட்டு அனுப்பி வைக்கிறார். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கோபி கோவிலுக்கு வந்து விடுகிறார்.
அப்பொழுது அப்பா அம்மாவிற்கு புண்ணியதானம் நடக்கிறது. ஆனால் கோபியை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியாகி கோபப்படுகிறார்கள். தாத்தா மற்றும் ஈஸ்வரி நீ ஏன் இங்கே வந்த, என் மகள் எங்களுக்காக நடுத்தர ஃபங்ஷனுக்கு உன்னை யார் கூப்பிட்டா? தயவு செய்து எந்தவித பிரச்சனையும் பண்ணாமல் எங்களை கஷ்டப்படுத்தாமல் வெளியே போ என்று அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள்.
ஆனால் கோபி, நீங்கள் என்னை என்ன சொல்லி அவமானப்படுத்தினாலும் நான் இங்கிருந்து போக மாட்டேன். நான்தான் இங்கே இருந்து நடத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறேன். எனக்கு தான் அந்த உரிமையும் இருக்கிறது என்று தெனாவட்டாக பேசுகிறார். இதைக் கேட்டு கோவப்பட்ட ஈஸ்வரி மற்றும் தாத்தா சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள்.
இதனை சமாளிக்கும் விதமாக பாக்கியவை ஒரு தலையாக காதலிக்கும் பழனிச்சாமி பஞ்சாயத்து பண்ண ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் கோபிக்கு சப்போர்ட்டாக பேசும் விதமாக, பரவால்ல விடுங்க அவர் இருந்துட்டு போட்டும். இந்த கோயிலுக்கு சாமி கும்பிட வந்திருக்க ஒரு ஆளு நினைச்சு அவரை கண்டுக்காதீங்க. அவரை பார்க்கவே ரொம்ப பாவமாக இருக்கிறது என்று பிச்சை போடும் அளவிற்கு பேசி கோபியை அசிங்கப்படுத்தி விடுகிறார்.
அந்த வகையில் பழனிச்சாமி சொன்னதை கேட்டு ஈஸ்வரி மற்றும் தாத்தாவும் அமைதியாக போய்விடுகிறார்கள். இருந்தாலும் இவன் சொல்லி நாம் இங்கே இருக்க வேண்டிய நிலைமை எல்லாம் ஏற்படுகிறது என்று பார்க்கும் பொழுது ரொம்பவே கேவலமாக இருக்கிறது என்று கோபி வழக்கம் போல் புலம்பி கொண்டே இருக்கிறார்.