Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஓவர் திமிரு காட்டிய கோபி.. ராதிகா எடுத்த அதிரடி முடிவு!

ஓவர் திமிரு காட்டிய கோபி.. ராதிகா எடுத்த அதிரடி முடிவு!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இவ்வளவு நாள் பொத்தி பொத்தி வைத்திருந்த எல்லா ரகசியத்தையும் மகா சங்கமம் என்கின்ற பெயரில் இந்த சீரியல் உடன் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் எல்லா ரகசியத்தையும் அவிழ்த்துவிட்டனர். இப்போது பாக்யாவிற்கும் கோபியின் […]

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இவ்வளவு நாள் பொத்தி பொத்தி வைத்திருந்த எல்லா ரகசியத்தையும் மகா சங்கமம் என்கின்ற பெயரில் இந்த சீரியல் உடன் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் எல்லா ரகசியத்தையும் அவிழ்த்துவிட்டனர்.

இப்போது பாக்யாவிற்கும் கோபியின் மீது லேசான சந்தேகம் ஏற்பட்டதுடன் மகன் எழில் அப்பாவை நம்ப வேண்டாம் என்றும், தனம் சொல்வதை எல்லாம் வைத்து பார்த்தால், பாக்யாவிற்கு மேலும் பயத்தை உண்டாக்குகிறது. கோபிக்கு வேறு ஒரு குடும்பம் இருக்கிறது என செல்வி அடிக்கடி சொல்வது சரியாக இருக்குமோ எனத் பாக்யா ஏற்கனவே நடந்த எல்லா விஷயத்தையும் யோசித்து பார்க்கிறாள்.

இது ஒருபுறமிருக்க தனம் ராதிகாவிடம், ‘கோபியின் குடும்பத்தை ஒரு முறை பார்த்தால், என்ன பிரச்சனை என்பது உங்களுக்கு தெரியும்’ என பத்த வச்சுட்டு போனதால் கோபியிடம் அவருடைய குடும்பத்தை பார்த்தே ஆகவேண்டும் என கண்டிப்பாக கூறுகிறாள்.

ஆனால் கோபி அப்படி எல்லாம் பார்க்க முடியாது என எடுத்தெறிந்து பேசியதால் ராதிகா, ‘அப்படியானால் இந்த வீட்டை விட்டு வெளியே போங்கள்’ என்று கோபியை வீட்டைவிட்டு துரத்துகிறார். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல இவ்வளவு நாள் கள்ளக்காதலியுடன் ஜாலியாக சுற்றி திரிந்த கோபி இப்பொழுது சரியாக மாட்டிக் கொண்டான்.

இதன் பிறகு பாக்யாவிற்கும் இந்த விஷயம் தெரிந்தால் நிச்சயம் பாக்யாவும் கோபியை வீட்டைவிட்டு துரத்தி விடுவாள். அதன்பிறகு கோபி, ராதிகாவிடம் இல்லாத பொல்லாத பொய்களை கூறி தன்னுடைய உச்சகட்ட நடிப்பையும் அரங்கேற்றி, ராதிகா வீட்டிலேயே தங்க முயற்சிப்பான்.

ராதிகாவும் தன்னுடைய முதல் வாழ்க்கையை இறந்ததால் இரண்டாவது வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என பாக்யா கோபியின் மனைவி என தெரிந்தும் அவனை ஏற்றுக்கொள்ள ராதிகா தயாராக இருக்கப் போகிறாள்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.