விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி மசாலா என்ற கேட்டரிங் நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் சமையல் ஆர்டர்களை வீட்டில் இருந்தபடியே பாக்யா சமைத்துக் கொடுக்கிறாள். அப்படிதான் ராதிகாவின் மகள் மயூவின் பிறந்த நாளைக்கு அனாதை குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்க விரும்பி பாக்யாவிடம் ஆர்டர் கொடுத்து அந்த உணர்வை ஆஸ்ரமத்திற்கு ராதிகா கொடுத்தாள்.
ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த உணவை சாப்பிட்ட 15 குழந்தைகள் மருத்துவமனையில் உடல்நிலை குறைவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விசயம் போலீஸ் ஊடகத்திற்கு தெரிய பாக்யாவை போலீசார் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ராதிகாவையும் விசாரிக்க போலீஸ் அங்கு அழைத்து வந்திருந்தது. பாக்யாவை நேருக்கு நேரில் சந்தித்தால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கோபி ராதிகாவின் மகளை அழைத்துக்கொண்டு மனைவி பாக்யாவை போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதைக் கூட கண்டுகொள்ளாமல் அம்போவென்று விட்டு சென்றுவிட்டான்.
இருப்பினும் பாக்யா பெற்றெடுத்த இரண்டு மகன்களும் பதறிக்கொண்டு ஸ்டேஷனுக்கு வருகின்றனர். இதன் பிறகு போலீஸ் ஆஸ்ரமத்தில் சேகரித்த மீதமிருந்த உணவை டெஸ்டுக்கு அனுப்பி அதில் குறைபாடு இருக்கிறதா என கண்டுபிடிக்க போகின்றனர்.
ஒருவேளை அந்த சாப்பாட்டில் ஏதாவது கலந்திருக்கும் வேலையை கோபி செய்திருக்கலாம். ஏனென்றால் அப்பொழுதுதான் பாக்யா ராதிகாவின் நட்பை நிரந்தரமாக பிரிக்க முடியும் என்பதற்காகவே கோபி இந்த கேடுகெட்ட வேலையை செய்து இருப்பான்.
அத்துடன் எதனால் குழந்தைகள் மயங்கியது என்பதை எழில் துப்புத் துலக்கி கண்டுபிடித்து, இந்த பிரச்சினைக்கு கூடிய விரைவில் கண்டுபிடித்துப் ஆகியவை இந்த பிரச்சினையில் இருந்து விடுவித்து விடுவான்.