வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

புத்தி பேதலித்து போன கோபி, தந்திரத்தால் காரியத்தை சாதிக்கும் ஈஸ்வரி.. ராதிகாவிற்கு ஆறுதல் சொல்லும் பாக்கியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தன்னுடைய பிறந்தநாளுக்கு டாடி வருவார் என்று மயூ வாசலில் நின்று காத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ராதிகா, மயூவை சமாதானப்படுத்தும் விதமாக உங்க டாடி வருவார் என்று ரொம்ப நம்பிக்கிட்டு இருக்காத. உன் கூட எப்பொழுதும் நான் இருப்பேன், நாம் இந்த வீட்டை விட்டு காலி பண்ணி விடலாம்.

மாமா இப்பதான் போன் பண்ணாங்க உனக்கு ஏதோ பெரிய கிப்ட் வாங்கி வச்சிருக்காங்க. நம்ம புது வீட்டுக்கு போனதும் பால் காய்ச்சல் ஃபங்ஷனையும் உன் பிறந்தநாளையும் சேர்த்து பெரிசாக கொண்டாடலாம். அதே மாதிரி ஏதாவது ஒரு பிக்னிக் போகலாம் என்று மயூவை சமாதானப்படுத்தும் விதமாக ராதிகா பேசி விட்டார். ஆனாலும் கோபி வரவில்லை என்ற வருத்தம் ராதிகாவிற்கு மனதளவில் இருக்கிறது.

இருந்தாலும் இனியும் இந்த கோபியை நம்பி பிரயோஜனமில்லை என்ற வீட்டை காலி பண்ணுவதற்கு போன் பண்ணி வர சொல்லி வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்துட்டு போக சொல்லி விடுகிறார். இதற்கிடையில் கோபி, மயூவின் பிறந்தநாளுக்கு போகவில்லை அதனால் காலையில் எழுந்ததும் ஒரு கைச்செயின் வாங்கிட்டு மயூவை பார்க்க போகணும் என்று பிளான் பண்ணி வைத்திருக்கிறார்.

இதை தெரிந்து கொண்ட ஈஸ்வரி, கோபியை எக்காரணத்தைக் கொண்டும் ராதிகாவை பார்ப்பதற்கு அனுப்பக்கூடாது என்பதால் தந்திரத்தால் காரியத்தை சாதித்து விட்டார். அதாவது கோபியிடம் உனக்கு நெஞ்சு வலி வந்த பொழுது நம்ம குலசாமி கிட்ட வேண்டுதல் வைத்தேன். அதை நாளைக்கே பண்ணியாக வேண்டும் நம் அனைவரும் சேர்ந்து போகலாம் என்று சொல்லி கோபி மனசை மாற்றி விட்டார்.

கோபியும் சொந்த புத்தி எதுவும் இல்லாமல் யோசிக்கும் புத்தி கூட இல்லாமல் ஈஸ்வரி என்ன சொன்னாலும் தலையாட்டி பொம்மையாக சரி என்று சொல்லியதால் கோவிலுக்கு போகலாம் என முடிவு பண்ணி விட்டார்கள். ஆனால் பாக்கியா நான் வரவில்லை எனக்கு ரெஸ்டாரண்டில் வேலை இருக்கு என்று சொல்லிவிட்டார். பின்பு ஈஸ்வரி, கோபி, இனியா மற்றும் செழியன் என அனைவரும் கோவிலுக்கு கிளம்பி விட்டார்கள்.

இவங்க திரும்பி வருவதற்குள் ராதிகா அந்த வீட்டை விட்டு காலி பண்ணி விடுவார். பிறகு இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பாக்கியா, ராதிகாவை சந்தித்து பேசுகிறார். ராதிகாவும் நான் என்னுடைய வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு கோபியை நம்பி கல்யாணம் பண்ணினது தான். அதற்குப் போதும் போதும் என சொல்லும் அளவிற்கு தண்டனையை அனுபவித்து விட்டேன்.

இனிமேலும் அவர் என்னுடைய வாழ்க்கையில் தேவையில்லை என்று முடிவு பண்ணி விட்டேன். அத்துடன் இனி என்னுடைய வாழ்க்கை முழுவதும் மயூவின் சந்தோசத்தை நோக்கி மட்டுமே இருக்கும். என்னாலையும் தனியாக வளர்த்துக் காட்ட முடியும் என்று பாக்கியவுடன் சொல்கிறார். அதற்கு பாக்கியாவும் ஆறுதல் சொல்லிய நிலையில் தன்னம்பிக்கையுடன் பேசி கிளம்பிவிட்டார். ஆக மொத்தத்தில் கோபியை நம்பி இரண்டு பெண்களின் வாழ்க்கையும் வீணாகிவிட்டது.

Trending News