வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ராதிகாவை நினைத்து புலம்பி அவஸ்தைப்படும் கோபி.. இனியாவை தூக்கிக் கொண்டாடும் குடும்பம்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பெண்கள் எந்த அளவுக்கு தைரியமாகவும், நம்பிக்கையுடனும் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதை முன்னிறுத்தி காட்டி வருகிறது. முக்கியமாக யாராவது ஒருவர் நம்மளை மட்டம் தட்டி பேசும் போது அவர்கள் கண் முன்னே நம் சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்கு உதாரணமாக பாக்கியா முழு ஈடுபாடுடன் இறங்கி வளர்ந்து வருகிறார்.

அதற்கேற்ற மாதிரி மொத்த குடும்பமும் இவருக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் பாக்கியாவின் அருமை தெரியாமல் இருந்த இனியா, போகப் போக அம்மாவின் பாசம், அன்பு, அரவணைப்பு எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து, அம்மாவின் அன்புக்கு மிஞ்சி வேறு எதுவும் இந்த உலகத்தில் பெருசு இல்லை என்று தெரிந்து கொண்டார்.

Also read: எதிர்நீச்சல், பாக்கியலட்சுமி சீரியல்களுக்கே டப் கொடுத்த குடும்ப சீரியல்.. கலைமாமணி விருது வென்ற முதல் தமிழ் சீரியல்

அதன்படி ஒவ்வொரு விஷயங்களையும் அம்மாக்கு பெருமை சேர்க்கும் விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அவருடைய படிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதன் விளைவாகவே தற்போது நல்லபடியாக தேர்வை முடித்துவிட்டு ரிசல்ட் காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் பாக்கியாவிற்கு சமையல் ஆர்டர் வேலை இருப்பதால் அங்கே போய்விடுகிறார்.

ஆனால் அங்கே போனதும் இனியாவின் மார்க் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். பிறகு குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் இனியாவின் ரிசல்ட் காக காத்துக் கொண்டிருந்த நிலையில் பரிட்சையில் தேர்வு பெற்றுவிட்டார் என்ற செய்தியை தெரிந்து கொள்கிறார்கள். அப்பொழுது இனியாவின் ஸ்கூலில் இருந்து கால் பண்ணி ஸ்கூல் ஃபர்ஸ்ட் என்ற செய்தியை அறிவிக்கிறார்கள்.

Also read: குணசேகரனுக்கு சரியான ஆப்பை வைத்த ஜீவானந்தம்.. அம்மாடி ஜனனி இதுல நீ என்ன பண்ண போற?

இதை கேட்டதும் இனியா மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் மிக சந்தோசத்திற்கு போய்விட்டார்கள். இதற்கு இடையில் பாக்கியா இவர்களுக்கு போன் பண்ணி கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் அவருக்கு மிகவும் பெருமையாகத்தான் இருக்கப் போகிறது. மொத்த குடும்பமும் இனியாவை தூக்கிக் கொண்டாடி வருகிறார்கள்.

இதற்கிடையில் வழக்கம்போல் கோபி மது அருந்த போய்விட்டார். அங்கே இவருடைய நண்பரிடம் ராதிகாவின் சம்பளம் உயர்ந்ததால் இனிமேல் என்னை மதிக்க மாட்டாள் என்று புலம்பி தவிக்கிறார். அத்துடன் எல்லா செலவையும் என் தலையிலே கட்டி விடுகிறார். சிக்கனம் என்றாலே ராதிகாவிற்கு என்னனு தெரியாது என்று புலம்புகிறார். இதற்கே இப்படி புலம்ப ஆரம்பித்தால் எப்படி கோபி, இனிமேல் தான் எல்லாமே இருக்கிறது. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

Also read: மொத்தமாக குணசேகரனுக்கு சமாதி கட்டும் குடும்பம்.. நாளுக்கு நாள் கொஞ்சம் ஓவராக தான் போகுது

Trending News