Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இளம் ஜோடிகளையே ஓவர்டேக் செய்த கோபி-ராதிகாவின் லவ் ட்ராக்.. அம்பேல் ஆன பாக்கியலட்சுமி

இளம் ஜோடிகளையே ஓவர்டேக் செய்த கோபி-ராதிகாவின் லவ் ட்ராக்.. அம்பேல் ஆன பாக்கியலட்சுமி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மனைவி பாக்யாவை நிரந்தரமாக பிரியும் நோக்கத்தில் கணவர் கோபி, மனைவிக்குத் தெரியாமல் விவாகரத்து வாங்க சதித்திட்டம் தீட்டி அதை செயல் படுத்துகிறான். இவ்வாறு இருக்க பாக்யாவின் வீட்டில் பண பிரச்சனை நாளுக்கு நாள் […]

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மனைவி பாக்யாவை நிரந்தரமாக பிரியும் நோக்கத்தில் கணவர் கோபி, மனைவிக்குத் தெரியாமல் விவாகரத்து வாங்க சதித்திட்டம் தீட்டி அதை செயல் படுத்துகிறான். இவ்வாறு இருக்க பாக்யாவின் வீட்டில் பண பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஏனென்றால் தாத்தாவின் மருத்துவ செலவிற்காக கோபி ஏற்கனவே லட்சக்கணக்கில் செலவு செய்ததால், நண்பர்களிடம் வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்கும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டான். இதனால் மூத்த மகன் செழியனிடம் கோபி பணம் கேட்டபோது, அவன் ‘இல்லை’ என்று மறுத்து விட்டான்.

இதனால் மன கலக்கத்தில் இருந்த கோபி, ராதிகா வீட்டிற்கு சென்றிருக்கிறான். அங்கு மிகவும் சோர்வாக இருக்கும் கோபியிடம், என்ன பிரச்சனை என ராதிகா கேட்க, எனக்கு ஒரு லட்சம் பண தேவை ஏற்பட்டிருக்கிறது. அதை சமாளிக்க வேண்டும் எனக் கூறுகிறான்.

உடனே ராதிகா தன்னுடைய செல்போனை எடுத்து ஆன்லைன் மூலமாக ஒரு லட்சம் பணத்தை கோபிக்கு பணப்பரிமாற்றம் செய்கிறாள். உடனே கோபி மனைவியை விட ராதிகா தன்னை உடனடியாக புரிந்து கொண்டு செயல்படுகிறார் என்ற பெருமிதத்துடன் ஒருவரை ஒருவர் காதல் கலந்த பார்வையுடன் பார்த்துக் கொள்கின்றனர்.

இந்த சமயத்தில் கோபிக்கு ராதிகா, பாக்யாவை விட மேல் என தோன்றுகிறது. ஆனால் பாக்யா மாடுபோல் சமையல் செய்தும், வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டும் குடும்பத் தலைவியாக செயல்படுவது கோபியின் பார்வையில் பெரிதாக தெரியாது.

இதன் காரணமாகவே கோபியை சின்னத்திரை ரசிகர்கள் கண்டபடி திட்டி தீர்க்கின்றனர். அத்துடன் பாக்கியலட்சுமி சீரியலில் பேரப்பிள்ளை எடுக்கிற வயதில் கோபி ராதிகாவுடன் டூயட் பாடுவது சோஷியல் மீடியாவில் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.