வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஸ்கூல் பீஸ் கூட கட்ட துப்பில்ல, ராதிகாவிடம் கெஞ்சும் கோபி.. இந்த அசிங்கத்தை நேரில் பார்த்த பாக்கியா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து ஆன பிறகு குடும்ப பொறுப்புக்கள் முழுவதும் பாக்யாவின் தலை மேல் விழுகிறது. கடைசிநேரத்தில் இனியாவிற்கு எப்படி பள்ளி கட்டணம் செலுத்துவது என்று தெரியாமல் பாக்யா முழித்துக் கொண்டிருக்கிறார். பள்ளி கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கேட்பதற்காக பாக்யா, இனியா படிக்கும் பள்ளிக்கு செல்கிறார்.

அங்கு ஏற்கனவே கோபி இனியாவின் கல்விக் கட்டணத்தை செலுத்தி விடுகிறார். மேலும் ராதிகாவும் அதே பள்ளிக்கு வருகிறார். ஏனென்றால் மும்பைக்கு போகலாம் என நினைத்திருந்த ராதிகாவின் முடிவு மாறியதால், ராதிகாவின் மகள் மறுபடியும் அதே பள்ளியில் தொடர்வதற்காக ஆசிரியரிடம் ராதிகா பேச வந்திருக்கிறார்.

Also Read: கோபியுடன் சேர்ந்து கூட்டு களவாணியான வாரிசு

இப்படி ஒரே பள்ளியில் பாக்யா, ராதிகா, கோபி மூவரும் இருக்கின்றனர். ஒருகட்டத்தில் ராதிகா-கோபி இருவரும் சந்திக்கின்றனர். அப்போது கோபி ராதிகாவிடம் உருக உருக பேசி தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சுகிறார்.

ராதிகாவும் கோபியுடன் வாழ்வதற்கு முழு விருப்பம் என்பதை உடைத்து கூறிவிட்டார். இருப்பினும் இன்னும் ஒரு சில முடிவுகள் எடுப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என்று ராதிகா கோபியிடம் சொல்கிறார். இவர்கள் இருவரும் பேசுவதை பாக்யா பார்த்துவிடுகிறார்.

Also Read: 50 வயதிலும் கள்ளக்காதலுக்காக சாகத் துணிந்த கோபி

ஏற்கனவே பண கஷ்டத்தில் இருக்கும் பாக்யாவிற்கு கோபி ராதிகாவுடன் சந்தோஷமாக ஜாலியாக இருக்கிறார் என்ற எண்ணம் தோன்றுகிறது. இதை பார்த்து சகித்துக்கொள்ள முடியாத பாக்யா கோபத்தில் ராதிகாவை கண்டபடி பேசப்போகிறார்.

பாக்யாவை மனதில் வைத்தே கோபியுடன் சேர்ந்து வாழ தயங்கும் ராதிகா, ஒவ்வொரு முறையும் செய்யாத தப்பிற்கு திட்டு வாங்குவதால் இனி அப்படி இருக்கக் கூடாது என முடிவெடுத்து பாக்யாவிற்கு வில்லியாக மாறுகிறார். இனிமேல்தான் பாக்கியலட்சுமி சீரியலில் சக்களத்தி சண்டை சூடுபிடிக்க போகிறது.

Also Read: வில்லி அவதாரம் எடுக்கும் ராதிகா!

Trending News