திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

பாக்கியா மீது ஓவர் கரிசனம் காட்டும் கோபி.. இனியாவை திருத்திய ஈஸ்வரி, உடைந்து போன ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தப்பு பண்றதெல்லாம் பண்ணிட்டு தற்போது திருந்திட்டேன் என்று சொல்லி போட்ட கோட்டை எல்லாம் அழிச்சு மறுபடியும் முதல்ல இருந்து நல்லவர் மாதிரி கோபி முழுமையாக மாறிவிட்டார்.

நீ வேண்டாம் என்று போன பொழுதும் அதை பாக்கியா ஏற்றுக் கொள்ள வேண்டும், திருந்திட்டேன் உன்னை புரிந்து கொண்டேன் என்று சொல்லி திரும்ப வந்த பொழுதும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரி மற்றும் கோபி தப்பு கணக்கு போட்டு விட்டார்கள்.

இவர்கள் இருவரும் தப்பு கணக்கு போட்டு விட்டார்கள் என்று தெரிந்தும் பாக்கியா அதை உடனே சரி செய்ய முடியாமல் ஈஸ்வரி சொன்னதுக்கெல்லாம் தலையாட்டும் பொம்மையாக மாறிவிட்டார். அதனால்தான் கோபி, பாக்கியா பிசினஸில் ஐடியா கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்து விட்டார்.

தற்போது பாக்கியா எடுத்திருக்கும் ஆர்டரை நல்லபடியாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கோபி அவருக்கு தெரிந்த செப்பை கூட்டிட்டு வந்ததோடு மட்டுமில்லாமல், பாக்கிய மீது ஓவர் கரிசனம் காட்டும் விதமாக நானே களத்தில் இறங்கி சமைக்கிறேன் என்று சமைக்க ஆரம்பித்து விட்டார்.

அத்துடன் கிடைக்கிற கேப்பில் எல்லாம் பாக்கியாவை புகழ்ந்து தள்ளி மொத்த ஸ்கோரையும் வாங்கி விட்டார். இதுவரை எழில் மற்றும் செல்வி, கோபியை ஏற்றுக் கொள்ளாத நிலையில் தற்போது இவர்கள் இருவருமே கோபி உண்மையிலேயே திருந்தி விட்டார் என்று பாக்யாவிற்கு அறிவுரை பண்ணும் அளவிற்கு வந்து விட்டார்கள்.

இப்படியே போனால் ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து மறுபடியும் பாக்யாவுடன் கோபியை இணைத்து விடுவார்கள் போல. இதற்கிடையில் ஈஸ்வரி செய்த ஒரு நல்ல காரியம் என்னவென்றால் மயூவிடம் கடுமையாகப் பேசும் விதமாக கோபியை அப்பா என்று கூப்பிடக் கூடாது என்று சொல்லி கஷ்டப்படுத்தி விட்டார்.

இதைக் கேட்ட மயூ, மனசளவில் உடைந்து போய் பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். உடனே பாக்கியா, மயூவை சமாதானப்படுத்தும் விதமாக பேசி ஆறுதல் படுத்தி விட்டார். அத்துடன் இனியாவும், மயூவிடம் வந்து பாட்டி பேசியது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

நீ அதை நினைத்து பீல் பண்ணாத, என்னைப் போல் அவரும் உனக்கு அப்பா தான் என்று சொல்லி ஆறுதல் படுத்தியது மட்டுமில்லாமல் மயூவுக்கு ஒரு சின்ன கிப்ட் கொடுத்து தங்கையாக ஏற்றுக் கொண்டார். ஒரு விதத்தில் இனியா இப்படி மாறியதற்கு ஈஸ்வரி மயூவை காயப்படுத்திய தான் காரணம் என்றே சொல்லலாம்.

இதனை தொடர்ந்து வீட்டிலும் சரி போன் பண்ணாலும் சரி கோபி தொடர்ந்து ராதிகாவிடம் பற்றி பெருமையாக பேசி மூச்சு விடும் நேரத்தில் கூட பாக்கிய என்று புலம்பியதால் ராதிகா மனசளவில் உடைந்து போய்விட்டார். இது போதாது என்று ஈஸ்வரியும், கோபி மற்றும் பாக்யா மனசில் ஒன்று சேர வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

அவர்கள் இருவரும் தான் ஏற்ற ஜோடி, நீ கோபி வாழ்க்கையை விட்டு விலகிவிடு என்று கூறியதால் ராதிகா மொத்த குடும்பத்துக்கும் குட் பாய் சொல்லிவிட்டு கிளம்பி விடுவார். ஆனால் பாக்கிய மனசில் ஒரு துளி கூட அப்படி ஒரு எண்ணம் இல்லை என்பதால் கோபி கூட சேர மாட்டார். கடைசியில் இரண்டு பொண்டாட்டியைக் கட்டிய நிலைமையில் தனி மரமாக தான் இருக்க முடியும் என்பதற்கு உதாரணமாக கோபி யாரும் இல்லாமல் அல்லல் படப் போகிறார்.

Trending News