வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

இனியா செய்த காரியத்துக்கு சப்போர்ட் பண்ணும் கோபி.. தலை குனிந்து நிற்கும் பாக்யா, ஆணவத்தில் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவி ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா செய்த காரியம் வீட்டிற்கு தெரிந்த நிலையில் பிறந்தநாள் என்று பொய் சொல்லி போனதற்கு அவசியம் என்ன வந்தது. உன்னை நம்பி தானே நாங்க வெளியே விடுகிறோம். நீ எங்க போற, யார் கிட்ட பேசுற என்று பார்த்தால் நல்லாவா இருக்கும். உன் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நீ நல்ல வச்சு செஞ்சுட்ட என்று பாக்கியா கோபமாக திட்டுகிறார்.

பாக்கியா எப்படி திட்டினாலும் இனியாவிடமிருந்து வரும் ஒரே வார்த்தை மன்னிச்சிடுமா என்றுதான். உடனே பாக்கியா இது ஒன்னு மட்டும் சொன்னா போதாது. காலேஜ் போற அளவுக்கு வளர்ந்து இருக்கேன்னா அதுக்கு ஏத்த மாதிரி அறிவையும் வளர்த்துக்கோ. நான் உன்னை நல்லா வளர்ப்பதில் தவறிட்டனோ என்று எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டாய்.

இனியாவிற்கு அட்வைஸ் பண்ணும் பாக்கியா

இனி இதை நினைத்து நான் ஒவ்வொரு நாளும் கவலைப்படற மாதிரி எனக்கு மிகப்பெரிய அவமானத்தை கொடுத்து விட்டாய் என்று தொடர்ந்து இனியாவை திட்டுகிறார். பிறகு எழில் மற்றும் செழியன், பாக்கியாவை சமாதானப்படுத்துகிறார்கள். அதன் பின் ஈஸ்வரி, இவ்வளவு நடந்தும் நீ ஏன் இனியா அந்த வீட்டில் இல்லை என்று எங்களுக்கு சொல்லவில்லை என செழியன் இடம் சண்டை போடுகிறார்.

இல்ல பாட்டி வீட்டிற்கு போய் இருப்பாள், இல்லையென்றால் நாம் கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்து உங்களை டென்ஷன் படுத்த வேண்டாம் என சொல்லவில்லை என செழியன் சொல்கிறார். உடனே இந்த கலவரம் எல்லாம் முடிந்த நிலையில் இனியா தூங்கப் போகிறார். அப்பொழுது பாக்யா, போயி தொடர்ந்து இனியாவிற்கு அட்வைஸ் கொடுக்கிறார்.

ஆனால் என்னதான் பாக்கியா, இனியாவிற்கு அட்வைஸ் கொடுத்தாலும் பிள்ளையை வளர்ப்பதில் ராதிகா இஸ் கிரேட் என்று சொல்லும் அளவிற்கு மயூ கேரக்டர் ரொம்பவே சரியாக இருக்கிறது. வீட்டிற்கு வந்த கோபி, ராதிகாவிடம் இனியாவிற்கு என்ன ஆச்சு என்று கேட்கிறார். ஆனால் ராதிகா எதுவும் சொல்லாமல் கோபியிடம் பேசாமல் போய்விடுகிறார்.

உடனே கோபி, பாக்கியா வீட்டிற்கு போய் பார்க்கிறார். ஆனால் அங்கு கதவு பூட்டி அனைவரும் தூங்கிய நிலையில் செழியனுக்கு போன் பண்ணி கீழே கூப்பிடுகிறார். வந்த செழியன் நடந்த விஷயத்தை சொல்லி ராதிகா தான் உதவி பண்ணினார்கள். இப்பொழுது எல்லா கலவரமும் முடிந்து விட்டது என்று சொல்கிறார். இனியாவை கூப்பிடு பாவம் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாள்.

நான் அவளை சமாதானப்படுத்தி ஆறுதலாக பேசிட்டு போகிறேன் என்று கோபி சொல்கிறார். அதற்கு செழியன் இனியா இப்பொழுதுதான் தூங்க ஆரம்பித்திருக்கிறாள். அதனால் காலையில் பேசிக்கொள்ளலாம் என்று கோபியை அனுப்பி வைக்கிறார். வீட்டுக்கு வந்த கோபி ராதிகா செய்த விஷயத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று ராதிகாவிடம் பேசுவதற்கு போகிறார். ஆனால் ஆணவத்தில் இருக்கும் ராதிகா, கோபியிடம் பேசாமல் அலட்சியப்படுத்துகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News