புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சக்காளத்தி இடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி அங்கிள்.. புருசனை சந்தேகப்பட்டு வேவு பார்க்கும் பாக்யா மருமகள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பழனிச்சாமியின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பாக்யா நினைக்கிறார். அத்துடன் வித்தியாசமான உணவுகளை சமைத்து பழனிச்சாமியின் பிறந்தநாளை அசைத்திட வேண்டும் என்று பாக்கியா, வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார்.

இதை கேட்ட செல்வி அக்கா பாக்கியா மற்றும் பழனிச்சாமியை வைத்து கிண்டலாக பேசுகிறார். இந்த சமயத்தில் ஜெனி மட்டும் கொஞ்சம் டென்ஷனாகவே இருக்கிறார். அதாவது நேரமாக ஆக செழியனை காணவில்லை என்று பதட்டம் வர ஆரம்பித்துவிட்டது.

ஏனென்றால் ஏற்கனவே செழியனை இப்படி கண்டுக்காமல் விட்டதனால் தான் மாலினியுடன் சுற்றிக்கொண்டு பல சேட்டைகளை பண்ணினார். மறுபடியும் எங்கே அதே மாதிரி ஒரு நிலைமை வந்து விடுமோ என்ற பயம் ஜெனி மனசில் ஆழமாக பதிந்து விட்டது.

இதனால் செழியனுக்கு அடிக்கடி போன் பண்ணி கொண்டே இருக்கிறார். ஆனால் செழியன் போன் எடுக்கவில்லை. கடைசியில் ஆபீஸ் முடித்து கொஞ்சம் சோர்வாக செழியன் வீட்டுக்கு திரும்புகிறார். ஆனால் கணவர் வீட்டுக்கு வந்த பிறகு ஜெனி எதுவுமே பேசாமல் கோபத்துடன் மாடிக்கு போய் விடுகிறார்.

உடனே பாக்கியா, செழியன் இடம் ஆபீஸ்ல இருந்து வர நேரம் ஆகும் என்றால் ஜெனிக்கு ஒரு போன் பண்ணி சொல்லிவிடு. அவள் ரொம்பவே உன்னை நினைத்து பயத்தில் இருக்கிறார் என்று செழியனை தேற்றுகிறார். இதனை அடுத்து கோபி அவருடைய ரெஸ்டாரண்டில் லீவு போட்ட செஃப் இடம் கோபமாக பேசுகிறார்.

எல்கேஜி பையனாக மாறிய கோபி அங்கிள்

அதாவது சொல்லாமல் இதே மாதிரி லீவு போட்டால் உன்னை வேலை விட்டு தூக்கி விடுவேன் என்று மிரட்டுகிறார். இதனை பார்த்த ராதிகா அவர் ஒருத்தர வைத்து தான் இந்த ஹோட்டல் ஓடுகிறது. அவரை தூக்கி விட்டால் எப்படி வியாபாரம் பண்ண முடியும் என்று கோபியை திட்டுகிறார்.

அதற்கு கோபி, ராதிகா தானே கொஞ்சம் வேலை பார்ப்பவர்களிடம் கண்டிஷன் ஆக இருக்க வேண்டும் என்று சொன்னார். இப்பொழுது அப்படியே மாத்தி பேசுகிறார். இவளை புரிஞ்சுக்கவே முடியலையே என்று ஒவ்வொரு நிமிடமும் ராதிகாவிடம் மாட்டிக் கொண்டு புலம்பித் தவிக்கிறார்.

பாக்கியாவிற்கு கணவராக கோபி இருக்கும் பொழுது எல்லாம் தெரிந்த அறிவாளியாக இருந்த கோபி, ராதிகாவை கல்யாணம் பண்ணதும் ஒண்ணுமே தெரியாத எல்கேஜி பையனாக மாறிவிட்டார். இதுதான் காலக்கொடுமை என்று சொல்வார்கள்.

Trending News