திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பாக்யாவை பழிவாங்க பிள்ளைகளை பகடகாயாக யூஸ் பண்ணும் கோபி.. சப்போர்ட் செய்யும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவிடம் இனியா டான்ஸ் கிளாஸ் சேர்க்க சொல்லி அடம்பிடிக்கிறார். ஆனால் பாக்கியா, ஏற்கனவே நிறைய செலவுகள் இருப்பதால் என்னால் இப்பொழுது உன்னை டான்ஸ் கிளாஸ் சேர்க்க முடியாது என்று சொல்லிவிட்டார். உடனே ஜெனி, நான் உங்க அண்ணனிடம் சொல்லி உனக்கு பணம் வாங்கி தருகிறேன் என்று இனியாவிற்கு வாக்கு கொடுக்கிறார்.

அந்த நேரத்தில் இனியாவிற்கு கோபி போன் பண்ணி பேசுகிறார். அப்பொழுது வீட்டில் நடந்த விஷயத்தை சொன்ன பொழுது கோபி, உங்க அம்மா என்ன சொல்றது வேண்டாம் என்று நான் இருக்கிறேன். நாளைக்கு நீயும் நானும் டான்ஸ் ஸ்டுடியோவுக்கு சென்று பேசிட்டு உன்னை சேர்த்து விடுகிறேன் என்று இனியாவிடம் சொல்லி சந்தோஷப்படுத்தி விட்டார்.

உடனே இனியாவும் மறுநாள் காலையில் கோபியுடன் டான்ஸ் ஸ்டூடியோவுக்கு போயி டான்ஸ் மாஸ்டர் இடம் பேசி டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டார். அத்துடன் நீங்கள் தான் எனக்கு ஒரு சிறந்த அப்பா என்று இனியா சொல்லும் அளவிற்கு கோபியும் பூரித்து போய்விட்டார். அடுத்ததாக கோபி நண்பர் மூலம் எழிலுக்கும் இயக்குனர் ஆகும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

இந்த சந்தோஷத்தை அமிர்தாவிடம் சொல்லிய நிலையில் பாக்யாவின் ஹோட்டலுக்கும் சென்று எனக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று எழில் சொல்லி சந்தோஷப்பட்டு கொள்கிறார். அத்துடன் இனிமேல் நம்முடைய கவலை எல்லாம் தீந்து போய்விட்டது. இனி உன்னையும் அம்மாவையும் சந்தோஷமாக ராணி மாதிரி பார்த்துக் கொள்வேன் என்று அமிர்தாவிடம் எழில் பேசிக்கொள்கிறார்.

இதை கேட்டதும் பாக்கியா ஆனந்த கண்ணீர் வடித்து சந்தோஷப்பட்டு கொள்கிறார். ஆனால் கோபி விரித்த வலையில் எழில் சிக்கி இருக்கிறார் என்பது தெரியாமலேயே சந்தோசப்பட்டு வருகிறார். கோபியை பொறுத்தவரை பாக்கியாவிற்கு ரொம்பவே நம்பிக்கையாக இருப்பது பிள்ளைகளை தான். அதனால் அந்த பிள்ளைகளை வைத்து பாக்கியாவை தனி மரமாக நிப்பாட்ட வேண்டும் என்று மூன்று பிள்ளைகளையும் பகடகாயாக யூஸ் பண்ணி வருகிறார்.

இது தெரிந்ததும் ராதிகா, தவறு என்று கோபியை கண்டிக்கிறார். ஆனால் கோபி, ராதிகா என்ன சொன்னாலும் காது கொடுத்து கேட்காமல் என் பிள்ளைகளுக்கு கஷ்டம் என்றால் நான் தான் முன்னாடி போய் நிற்பேன். அதை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்கிறார். உடனே ராதிகா, பாக்யா வேண்டாம்னு சொல்ற ஒரு விஷயத்துக்கு நீங்க சப்போர்ட் பண்ணுவதால் இனியா வாழ்க்கைக்கு நல்லதாகாது என்று அட்வைஸ் கொடுத்து பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார்.

ஆனாலும் கோபி எதையும் காது கொடுத்து கேட்காமல் பாக்யாவுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார். இதற்கிடையில் பாக்யாவிற்கு என்ன கஷ்டம் வந்தாலும் உறுதுணையாக இருந்த பழனிச்சாமியும் ஒரு வேலை விஷயமாக துபாய்க்கு போகிறேன் என்று சொல்லி போயிட்டார். இந்த சூழ்நிலையில் கோபி நினைத்தபடி பாக்யா பக்கத்தில் யாரும் இல்லாமல் அவஸ்தைப்படும் அளவிற்கு கோபி போய் நிப்பாட்டப் போகிறார்.

Trending News