ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ராதிகா கொடுத்த சவுக்கடியால் பாக்கியா உடன் சேர நினைக்கும் கோபி.. அம்மாக்கு ஏற்ற மகளாக மாறிய இனியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா பப்பில் பட்ட அவமானத்தையும் குடும்பத்தினர் திட்டிய வார்த்தைகளும், காலேஜில் பாக்யா கெஞ்சுனதையும் பார்த்து நம்மளால்தான் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சினை என்று நினைத்து வீட்டில் லெட்டர் எழுதி வைத்துவிட்டு தவறான முடிவை எடுக்க நினைத்தார்.

ஆனால் அதற்குள் பாக்கியா, இனியாவை தடுத்து புத்திமதி சொல்லி காப்பாற்றி விடுகிறார். அத்துடன் இனி அம்மாவுக்கு ஏற்ற மகளாகவும், குடும்பத்திற்கு ஏற்ற பொண்ணாகவும் இருப்பேன் என்று இனியா வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து பாக்கியா வீட்டில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து தற்போது குடும்பத்துடன் சந்தோஷமாக மகிழ்ந்து வருகிறார்கள்.

பாக்கியாவை பார்த்து வயிற்றெரிச்சல் படும் கோபி

இதை தூரத்தில் நின்னு வேடிக்கை பார்த்த கோபிக்கு இந்த ஒரு அழகி தருணத்தில் நாம் இல்லாமல் போய் விட்டோமே என்று வருத்தப்படுகிறார். அத்துடன் நாம் பெற்ற பிள்ளைகளே நம்மளை வெறுக்கும் அளவிற்கு நிலைமை ஆகிவிட்டதே என்று வழக்கம்போல் புலம்பிக்கொள்கிறார். அதோடு ராதிகா வீட்டிற்கு போன நிலையில், ராதிகாவும் கடுப்பேற்றும் விதமாக கோபமாக பேசுகிறார்.

உடனே கோபி எத்தனை நாளாக மனதிற்குள் பூட்டி வைத்திருந்த ஆத்திரத்தை வெளிக்காட்டும் விதமாக ராதிகாவிடம் என்னைக்கு நீ என் வாழ்க்கைக்குள் நுழைந்தையோ, அன்னைக்கே என்னுடைய மொத்த குடும்பமும் என்னை விட்டு போய்விட்டது என்று சொல்கிறார். அதற்கு ராதிகா அப்புறம் ஏன் என் கூட இருக்கிறீங்க, விவாகரத்து வாங்கிட்டு அந்த குடும்பத்துடன் போய் இருக்க வேண்டியதுதானே என்று கோபி அதிர்ச்சி ஆகும் அளவிற்கு வார்த்தையை தெறிக்கவிட்டு விட்டார்.

இதை கேட்டதும் கோபி வழக்கம் போல் புலம்பிக் கொண்டு மது அருந்திவிட்டு வந்த நிலையில் பாக்கியா அவருடைய குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பதையும், ஜெனி செழியன் மற்றும் அமிர்தா பாப்பா உடன் விளையாடிக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து சோகத்தில் மூழ்கி விட்டார். அது மட்டும் இல்லாமல் ராதிகா வீட்டிற்கு வந்து, இப்ப இருக்கிற சூழ்நிலைக்கேற்ற பாடலை கேட்டு ராதிகாவை கடுப்பேற்றுகிறார்.

அந்த வகையில் இப்பொழுது தான் கோபிக்கு தெரிகிறது, குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும். ஆசைக்காகவும், கையில் பணம் இருக்கிறது என்பதற்காகவும் நமக்கு தோன்ற விஷயங்கள் எல்லாத்தையும் செய்திட முடியாது. அன்பான பொண்டாட்டி, பாசமான பிள்ளைகள் நிறைவான குடும்பம் என்று சந்தோசமாக இருந்த குடும்பத்தை விட்டுவிட்டு பைத்தியக்காரத்தனமாக ராதிகா பின்னாடி போனோமே என்று வருத்தப்படுகிறார்.

இப்பொழுது தான் கோபிக்கு, பாக்கியாவின் அருமை புரிகிறது. அதாவது என்னதான் சுய புத்தி இருந்தாலும் பட்டதுக்கு அப்புறம் தெரியும் புத்தி தான் ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப கோபிக்கு ராதிகா கொடுக்கும் ஒவ்வொரு சவுக்கடியால் பாக்யாவின் அன்பு புரிந்து விட்டது.

ஆனால் காலம் கடந்து போன அன்புக்கு என்னைக்கும் மதிப்பில்லை என்று சொல்வதற்கேற்ப கோபிக்கு அவருடைய குடும்பமும் இல்லாமல் ராதிகாவின் சப்போர்ட்டும் இல்லாமல் தனியாக நிற்கும்படியாக நிலைமை வந்துவிட்டது. இதை தான் இருக்கிறதை வைத்துவிட்டு வாழனும் ,பறக்க ஆசைப்படக்கூடாது என்று சொல்வதற்கு ஏற்ற சிறந்த உதாரணம்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News