Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா காதல் விஷயத்தை வைத்து பாக்கியா குடும்பத்தில் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. இதனால் செழியன், ஆகாஷை அடித்த நிலையில் வீட்டுக்கு வந்த பாக்கியா கோபத்துடன் செழியனை அடித்து விடுகிறார். இதனை பார்த்த ஜெனி, எப்படி என் வீட்டுக்காரரை நீங்கள் அடிக்கலாம். உங்களுக்கு அம்மா என்கிற உரிமை இருக்கிற மாதிரி இனியா மீது அண்ணன் என்கிற உரிமை செழியனுக்கு இருக்கிறது.
அதனால் இனியா, ஆகாசை காதலித்தது அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்காகத்தான் அடித்துவிட்டான் ஆனால் நீங்கள் என்னமோ செழியன் மீது தவறு இருக்கிறது என்பதற்கு ஏற்ற மாதிரி இப்படி எல்லோரும் முன்னாடியும் அடிப்பது நியாயமே இல்லை என்று ஜெனி, பாக்யாவிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டார். இப்படி பேச்சுக்கள் ஒவ்வொன்றும் நீண்ட நிலையில் இனியா, என்னால் இந்த குடும்பத்தில் பிரச்சினை வேண்டாம்.
இனி ஆகாஷை பார்த்து பேச மாட்டேன், எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்கிறார். அடுத்ததாக செல்வி, பாக்யா வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். செல்வியை பார்த்த ஈஸ்வரி கோபப்பட்டு திட்டுகிறார். அதற்கு செல்வி நான் ஒன்னும் உங்க வீட்டுக்கு வேலைக்கு வரவில்லை. நான் சம்பாதித்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தில் நகை எடுத்ததை பாக்கியா அக்காவிடம் கொடுத்து வைத்திருந்தேன்.
அதை வாங்கிட்டு போக தான் வந்தேன், என் மகன் ஹாஸ்பிடலில் முடியாமல் இருக்கும் பொழுது அதை பார்ப்பதற்கு எனக்கு காசு தேவைப்படுகிறது என்பதற்காக தான் நகை வாங்க வந்தேன் என்று சொல்கிறார். உடனே பாக்கியாவும் நகையை கொடுத்து விடுகிறார். இருந்தாலும் ஈஸ்வரி மற்றும் கோபி, செல்வியை அவமானப்படுத்தி பேசுகிறார்கள். பிறகு செல்வி, செழியனை பார்த்து நீங்கள் செய்த காரியத்திற்கு என் வீட்டு பக்கத்தில் இருப்பவர்கள் ரொம்பவே கோபத்தில் இருக்கிறார்கள்.
அத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் போய் கம்ப்ளைன்ட் கொடுப்பதற்கு என்னை கூப்பிடுகிறார்கள். ஆனால் நான்தான் வேண்டாம் என்று பொறுமையாக இருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு செழியன் என்னை மிரட்டுறீங்களா, உங்களால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிக்கோங்க என்று சொல்கிறார். உடனே செல்வி, உங்களை மாதிரி எல்லாம் நான் யோசிக்காமல் எதையும் பண்ண மாட்டேன்.
கோர்ட்டுக்கு போய்விட்டால் ஆகாஷிடம் இனிய பேசி பழகினது வெளியே வந்துவிடும். அது இனிய பாப்பா வாழ்க்கைக்கு சரியாக இருக்காது என்பதற்காகத்தான் நான் அந்த ஒரு முடிவை எடுக்கவில்லை. அத்துடன் நான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்காமல் இருப்பதற்கு முழுக்க முழுக்க பாக்கிய அக்காவும் இனியாவிற்காகவும் தான். மற்றபடி உங்களை பார்த்து எனக்கு எந்தவித பயமும் இல்லை என்று ஈஸ்வரி கோபி மற்றும் செழியனுக்கு சரியான பதிலடி கொடுத்துவிட்டு போய்விடுகிறார்.
இதனை தொடர்ந்து பாக்கியாவிடம் கோபி பேசுகிறார். வீட்டில் உள்ள பிரச்சனை நினைத்து நீ கவலைப்படாதே, இனியவை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ மற்ற வேலையை பார்த்துக் கொள் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியம் விட்டுட்டு மூணு வருஷமாக போன பொழுது நான்தான் இனியாவையும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டேன். இதற்கு மேலேயும் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியும்.
தயவு செய்து இந்த வீட்டை விட்டு மட்டும் நீங்கள் போய்விடுங்கள் என்று சொல்கிறார். அதற்கு கோபி நான் போக முடியாது, என்னுடைய மகளின் வாழ்க்கையை சரி செய்ய வேண்டும், அதற்கான பொறுப்பு என்னிடம் இருக்கிறது. அதனால் நீ என்ன சொன்னாலும் இந்த வீட்டை விட்டு போக முடியாது என்று பாக்யாவிற்கு மொத்தமாக நாமத்தை போட்டு விட்டார். மக்கு மாதிரி எல்லாத்தையும் சகித்துக் கொண்டிருந்த பாக்யாவிற்கு இது தேவைதான். இனி கோபியும் ஈஸ்வரியும் சேர்ந்து ஓவராக ஆட போகிறார்கள்.