புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாக்யாவை தோற்கடித்து ஜெயித்துக் காட்டிய கோபி.. இனியாவை காப்பாற்ற போகும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி மற்றும் பாக்யா இருவருக்கும் இடையே சமையல் போட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பாக்யாவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக கோபி மும்மரமாக வேலை பார்த்து வருகிறார். அந்த வகையில் இருவரும் சமமாக வெற்றி பெற்று வரும் பொழுது பெஸ்ட் செப்பை கூட்டிட்டு வந்தால் இன்னும் வெற்றி கிடைக்கும் என்ற ஆசையில் கோபி வேறு ஒருவரை கூட்டிட்டு வருகிறார்.

இதை பார்த்ததும் ஈஸ்வரி, ஜட்ஜ் ஆக வந்திருப்பவர்களிடம் புதுசாக யார் யாரையோ கூட்டிட்டு வந்து சமையல் செய்ய சொன்னால் அது எப்படி சரிப்பட்டு வரும் என்று கேட்கிறார். அதற்கு ஜட்ஜ், கூட இருந்தவருக்கு உடம்பு சரியில்லாததால் வேறு ஒருவரை கூட்டிட்டு வருவதாக எங்களிடம் சொல்லி பெர்மிஷன் வாங்கிய பிறகுதான் கூட்டிட்டு வந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

பாக்கியாவை விட ஒரு மார்க் வித்தியாசத்தில் ஜெயித்த கோபி

இருந்தாலும் இது நியாயமே கிடையாது என்று ஈஸ்வரி அவர்களிடம் வாக்குவாதம் பண்ணுகிறார். பிறகு பாக்கியா, மாமியாரை சமாதானப்படுத்துகிறார். இதற்கிடையில் பாக்கியா, இனியா வீட்டுக்கு போயிட்டாளா என்று போன் பண்ணி பார்க்கிறார். ஆனால் இனியா போன் எடுக்காததால் ரொம்பவே டென்ஷன் ஆகி செழியனுக்கு போன் பண்ணி விசாரிக்கிறார்.

செழியன் நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் அதை நினைத்து டென்ஷன் பட வேண்டாம். சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியுடன் வாருங்கள் என்று ஊக்கப்படுத்தி பேசுகிறார். இந்த நிலையில் இனியா, நண்பர்களுடன் டிஸ்கோ நடக்கும் இடத்திற்கு போயிருக்கிறார். அங்கே பிரச்சினை ஒன்று ஆரம்பமாகப் போகிறது. இதில் இனியா போலீஸ் ஸ்டேஷன் போகும் அளவிற்கு மாட்டிக் கொள்ளப் போகிறார்.

இதற்கிடையில் ராதிகா ஒரு ஹோட்டலுக்கு சென்று தோழியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது வாழ்க்கை பற்றி ரொம்ப அழுத்து போய் தினம் தினம் நடக்கும் பிரச்சினையை சொல்லி புலம்புகிறார். இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது இனியாவை எதிர்ச்சியாக ராதிகா பார்க்கும் சூழ்நிலை ஏற்படப் போகிறது. அந்த வகையில் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட இனியாவை ராதிகா தான் காப்பாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தற்போது ராதிகா மீது கோபத்தில் இருக்கும் பாக்கியா குடும்பத்தில் இருப்பவர்கள் இந்த ஒரு விஷயத்தினால் ராதிகா மீது கோபப்படாமல் நன்றி தெரிவிக்கும் வகையில் காட்சிகள் வரப்போகிறது. அத்துடன் பாக்கியாவும், ராதிகா செய்த உதவிக்கு நன்றி கடன் சொல்லி மறுபடியும் ஒன்றாக சேர போகிறார்கள். இதனை தொடர்ந்து இதுவரை நடைபெற்ற போட்டியில் பாக்யாவை விட கோபி தான் ஒரு மார்க் வித்தியாசத்தில் ஜெயித்துக் காட்டியிருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News