சனிக்கிழமை, மார்ச் 1, 2025

பாக்யா மனதில் இடம் பிடிக்க ஏழரையை இழுத்துவிட்ட கோபி.. திருந்தாத ஈஸ்வரி இடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் பேரன்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா சில முடிவுகளை அதிரடியாக எடுத்தாலும் ஈஸ்வரி விஷயத்தில் கொஞ்சம் வீக்காக இருந்தார். ஆனால் அதுக்கும் ஆப்பு வைக்கும் விதமாக ஈஸ்வரி, கோபி பாக்கியா கல்யாணத்தை பற்றி பேசி பாக்கியாவின் கோபத்தை அதிகரித்துவிட்டார். இதனால் கோபமடைந்த பாக்யா, ஈஸ்வரிடம் உங்க பையனை விட்டு பிரிந்திருக்க முடியவில்லை என்றால் நீங்களும் அவருடன் வெளியே போய் விடுங்கள் என்று கூறினார்.

இதனால் மனமடைந்து போன ஈஸ்வரி சாப்பிடாமல் பிடிவாதமாக இருக்கிறார். பாக்யாவின் வீக்னஸ் பாயிண்டை புரிந்து ஈஸ்வரி இருந்த நிலையில் பாக்யா வேற வழி இல்லாமல் ஈஸ்வரியை சமாதானப்படுத்த பார்க்கிறார். ஆனால் ஈஸ்வரி சாப்பிட வரமாட்டேன் என்று சொல்லிய நிலையில் பாக்யா இதற்காக நான் அசரமாட்டேன். அதே நேரத்தில் கோபியுடன் சேரவும் வாய்ப்பில்லை என்று சொல்லி இனியாவிடம் உங்க பாட்டியை சாப்பிட வை.

அதுவும் முடியவில்லை என்றால் உங்க அப்பாவிடம் சொல்லி எப்படியாவது பாட்டியை சாப்பிட வைத்துவிடு என்று சொல்லி பாக்யா ரெஸ்டாரண்டுக்கு போய்விட்டார். பாக்யா கிளம்பியதும் இனிய இதுதான் சான்ஸ் என்று ஆகாசுடன் போன் பேசிக் கொண்டே இருக்கிறார். இடையில் பாக்யா போன் பண்ணி மாமியார் சாப்பிட்டார்களா என்பதை விசாரிக்க கால் பண்ணி கொண்டே இருக்கிறார்.

ஆனால் இனியா அதை எடுக்காமல் ஆகாசிடம் பேசிக்கொண்டே இருந்தார். பிறகு ஒருவழியாக கோபிக்கு விஷயம் தெரிந்த நிலையில் கோபி வீட்டிற்கு வந்து ஈஸ்வரியை சாப்பிட வைத்து சமாதானப்படுத்தி விட்டார். உடனே ஈஸ்வரி, கோபி பாசத்தை கண்டு பூரித்துப் போய் பேச ஆரம்பித்து விட்டார். இதை பார்த்த இனியா, பாக்கியாவிடம் நீ எத்தனை நாள் பாட்டிக்காக கஷ்டப்பட்டு சாப்பிட வைத்து சமாதானப்படுத்தி இருக்கிறாய்.

ஆனால் அப்போதெல்லாம் பாட்டி உன்னை கண்டு கொள்ளவே இல்லை. இப்போது அப்பா கொஞ்சம் சமாதானப்படுத்தியதும் பெருமையாக பேசுகிறார் இது நியாயமே இல்லை என்று பாக்யாவுக்கு இனிய ஜால்ரா அடிக்கிறார். ஆனாலும் பாக்கியா அதெல்லாம் இருக்கட்டும் நீ யாருடன் போன் பேசிக்கொண்டே இருக்கிறாய். நான் முக்கியமாக உன் கிட்ட பேசணும் என்று கால் பண்ணியும் நீ எடுக்கவே இல்லை.

தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு முழிக்காதே என்று கண்டிக்கிறார். இதை எல்லாம் தொடர்ந்து கோபி, பாக்யாவிடம் சொன்னபடி இரண்டு மாதத்தில் வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்று வாக்கு கொடுத்திருந்தார். ஆனால் அதற்குள் சில விஷயங்களை முடித்துவிட்டு போகிறேன் என்று சொல்லியிருந்தார். அந்த வகையில் செழியன் மற்றும் எழில் இடம் பேசி பாக்கியா வீட்டுக்கே மறுபடியும் வரவழைத்து விடுகிறார்.

அப்படி அவர்கள் வந்ததும் பாக்கியாவிடம் கோபி உனக்கு இப்பொழுது சந்தோஷம் தான பிள்ளைகள் அனைவரும் உன்னுடன் வீட்டிற்கு வந்து விட்டார்கள் என்று சொல்கிறார். ஆனால் பாக்கியா நான் உங்களிடம் எப்பொழுது அப்படி சொன்னேன் அவங்க இங்க வந்தால் தேவையில்லாத பிரச்சனையை வரும். அதில் நான் தான் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படுவேன் என்று கோபியிடம் சண்டை போடுகிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி ஈஸ்வரியும், வீட்டிற்கு வந்த எழில் அமிர்தாவிடம் குழந்தை பற்றி கேட்டு அவங்களை நோகடித்து பேசுகிறார். இதை பார்த்த பாக்கியா, கோபிடம் இது தேவையா என்று கேட்கிறார். என்ன ஆனாலும் இந்த ஈஸ்வரி திருந்தாமல் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இஷ்டத்துக்கு பேசுவதை நிறுத்தவே இல்லை. அதே மாதிரி கோபியும், பாக்யாவுக்கு நல்லது பண்ணுகிறேன் என்ற நினைப்பில் தேவையில்லாத ஏழரை தான் இழுத்து விட்டிருக்கிறார்.

Trending News