
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இருக்கிற வாழ்க்கையை சந்தோஷமாக வாழாமல் பேராசை பட்டால் கடைசியில் ஒண்ணுமே நிலைக்காது என்பதற்கு சிறந்த உதாரணமாக கோபி நிலைமை இருக்கிறது. அதாவது பாக்யாவுடன் சந்தோசமாக வாழ்ந்து மூன்று பிள்ளைகளை பெற்ற பிறகு கோபிக்கு ராதிகா மீது ஆசை வந்தது. அதனால் குடும்பத்தை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் ராதிகாவை கல்யாணம் பண்ணினார்.
அப்படி கல்யாணம் நடந்த பிறகும் அந்த வாழ்க்கையும் நிம்மதி இல்லாமல் ராதிகா கோபியை விட்டு போகும் படி சூழ்நிலை அமைந்து விட்டது. பிறகு பிள்ளைகள் அம்மாவுக்காக கோபி, பாக்யா வீட்டில் இருந்தார். ஆனால் கோபி செஞ்ச முன் வினை தற்போது எதிர்வினையாக நிற்கிறது என்பதற்கு ஏற்ற மாதிரி குடும்பத்தை பற்றி யோசிக்காமல் போன கோபியை பற்றி தற்போது யாரும் யோசிக்க விரும்பவில்லை.
அதனால் இனியா பிரச்சனையை காரணமாக வைத்து வீட்டை விட்டு போக முடிவெடுத்த கோபியை யாரும் தடுக்கவில்லை. ஆனாலும் பெத்த மனசு பித்து பிள்ளை மனசு கல்லு என்ற பழமொழிக்கு ஏற்ப கோபியை பிள்ளைகள் அலட்சியப்படுத்தி இருந்தாலும் பெற்ற மனசு கேட்காமல் ஈஸ்வரி, கோபியை தனியாக விட முடியாமல் கோபிய கூடவே வீட்டை விட்டு கிளம்பிவிட்டார்.
அதாவது கோபியின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகவும் பொண்டாட்டிகளும் பிள்ளைகளும் இல்லாமல் தனியாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஈஸ்வரி தான். அதனால் கோபியுடன் ஈஸ்வரி தனியாக போய்விட்டார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத பாக்கிய, ஈஸ்வரி இருக்கும் வீட்டிற்கு சென்று வீட்டிற்கு வர சொல்லி கெஞ்சுகிறார். ஆனால் ஈஸ்வரி என் பிள்ளையை அப்படியே விட்டுட்டு வர முடியாது என்று அவருடைய வாழ்க்கை நினைத்து பீல் பண்ணுகிறார்.
அதற்கு பாக்கியம், உங்க பிள்ளை தனியாக இருப்பதற்கு நான் எதுவும் பண்ண முடியாது. அதே நேரத்தில் அவர் பெற்ற பிள்ளைகள் அப்படி அவரை விட்டு விடவும் மாட்டாங்க. அதனால் நீங்க எதை பற்றியும் கவலைப்படாமல் என்னுடன் வாங்க என்று கேட்கிறார். ஈஸ்வரியால் தான் எல்லா பிரச்சினையும் வந்தது என்று பாக்கியாவிற்கு தெரிந்தும் திருந்தாமல் மறுபடியும் மாமியாரை கெஞ்சுகிறார்.