வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாக்யாவிற்கு உதவ போன செழியனுக்கு முட்டுக்கட்டை போட்ட கோபி.. கடைசி நிமிடத்தில் பணத்தைக் கொண்டு வந்த நபர்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவிடம் இருந்த நகைகளை அடகு வைத்து கொஞ்சம் பணத்தை ஏற்பாடு பண்ணி விட்டார். அந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனியை வைத்து அக்கவுண்டில் அனுப்பி கொண்டே இருக்கிறார். ஆனால் இந்த நேரத்தில் பணம் இன்னும் வந்து சேரவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் சிலர் ஹோட்டலுக்கு முன் பிரச்சனை பண்ணிக் கொண்டிருப்பது தெரிய வருகிறது.

உடனே பாக்யா மற்றும் எழில் இருவரும் சேர்ந்து ஹோட்டலுக்கு போகிறார்கள். அங்கே பிரச்சினை பண்ணும் நபர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக உங்க அக்கவுண்டுக்கு பணத்தை போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். என் மருமகள் வீட்டில் இருந்து எல்லா வேலைகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் எனக்கு அவகாசம் கொடுங்கள் எல்லோருக்கும் அனுப்பி விடுவேன் என்று கெஞ்சுகிறார்.

ஆனால் பாக்யா என்ன சொன்னாலும் காது கொடுத்து கேட்காத மக்கள் பிரச்சினை பண்ணி போலீஸ் கேஸ் ஆகும் அளவிற்கு ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள். உடனே அங்கு இருப்பவர்கள் போலீசுக்கு போன் பண்ணி வர சொல்கிறார்கள். போலீஸ் வந்ததும் பாக்யாவிடம் இவங்க கேட்கிறபடி சீக்கிரமாக பணத்தை கொடுங்கள் என்று சொல்கிறார்.

இல்லை என்றால் உங்களை நாங்கள் ஸ்டேஷனுக்கு கூட்டிப் போக வேண்டிய சூழ்நிலை வந்துவிடும் என்று மிரட்டவும் செய்கிறார்கள். இதற்கு இடையில் பாக்கியா மீதி பணத்திற்காக ஏற்கனவே இவருக்கு பணம் கொடுத்து உதவி செய்த நபரை சந்தித்து பேசி பணம் கேட்டார். அவரும் பாக்கியா கேட்டுக் கொண்டதன்படி பணத்தை கொண்டு வந்து தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.

இதனால் தற்போது ஹோட்டலில் நடக்கும் பிரச்சனையை வைத்து அந்த நபருக்கு பாக்கியா போன் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் போன் எதுவும் போகாததால் கடைசி நிமிடத்தில் பாக்யா பதட்டம் அடைகிறார். இதற்கிடையில் செழியன் வேலை போன சோகத்தில் தனியாக உட்கார்ந்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது ஜெனி, செழியனுக்கு போன் பண்ணி அத்தையின் ஹோட்டலுக்கு முன்னாடி பாதிக்கப்பட்ட மக்கள் பிரச்சனை பண்ணுகிறார்கள். நீ உடனடியாக உன்னுடைய சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு போய் உதவி பண்ணு என சொல்கிறார். உடனே செழியனும் சரி என்று சொல்லி கிளம்பும் அந்த நேரத்தில் கோபி போன் பண்ணுகிறார்.

அப்பொழுது செழியன், அம்மா ஹோட்டலில் மக்கள் பிரச்சனை பண்ணுவதால் நான் பணத்தை எடுத்துக் கொடுக்கப் போகிறேன் என்று சொல்கிறார். இதை கேட்ட கோபி, பாக்கியா பிரச்சனையே சமாளிக்க முடியாமல் ஜெயிலுக்குப் போக வேண்டும் என்று நாம் ஒரு பிளான் போட்டால் இவன் என்ன உதவப் போறதாக சொல்கிறான் என்று யோசிக்கிறார்.

உடனே இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக செழியனை உன் வேலை விஷயமாக என் நண்பரிடம் சொன்னேன். அவர் இப்பொழுது ஹோட்டலுக்கு வந்து உன்னை சந்தித்து பேசுவதற்கு என்னுடைய ஹோட்டலில் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார். நீ அதனால் சீக்கிரமாக வா என்று சொல்லியதால் செழியனும் வேலை என்பதால் எதைப் பற்றி யோசிக்காமல் சரி என்று ஹோட்டலுக்கு போய் விடுகிறார்.

இதனால் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பாக்யாவிற்கு யார் உதவப் போகிறார் என்ற கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வகையில் நிச்சயம் பாக்யாவிற்கு கடைசி நிமிடத்தில் உதவுவது வட்டிக்கு பணத்தை கொடுக்கிறேன் என்று சொன்ன அந்த நபர் தான் பாக்கியா கேட்டுக் கொண்ட படி வந்து பணத்தை கொடுக்கப் போகிறார்.

Trending News