புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ராதிகாவின் அம்மாவை மிரட்டிய கோபி.. ஜெயிலுக்கு போகும் ஈஸ்வரி, ஓவர் அராஜகம் பண்ணிய மாமியார்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, பாக்கியாவிற்கு கெடுதல் நினைத்ததை தவிர அவர் வேறு எதுவும் பண்ணவில்லை. ஆனால் அந்த கெடுதல் தான் இப்பொழுது வரை கோபியை சந்தோசமாக இல்லாமல் ஆட்டி படைக்கிறது. அதாவது ராதிகாவின் குழந்தை கலைந்ததற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று ராதிகாவின் அம்மா ஒவ்வொரு முறையும் குத்தி காட்டி பேசுகிறார்.

அந்த வகையில் ராதிகா வீட்டில் இல்லாத போது கோபிக்கும் ராதிகாவின் அம்மாவிற்கும் வாக்குவாதம் முத்தி விட்டது. உடனே கோபி நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருந்து எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். எப்பொழுது எங்கள் வாழ்க்கைக்குள் நீங்கள் வந்தீர்களோ, அப்பொழுது எங்களுடைய சந்தோஷம் எல்லாம் பறிபோய் விட்டது.

ஓவர் அராஜகம் பண்ணும் ராதிகாவின் அம்மா

உங்கள் புத்தி தெரியாமல் உங்க பேச்சைக் கேட்டுக் கொண்டு ராதிகா என்னிடம் சண்டை போடுகிறார். தயவு செய்து இந்த வீட்டை விட்டு நீங்கள் கிளம்பி விடுங்கள், அப்பொழுது தான் நானும் ராதிகாவும் சந்தோஷமாக இருக்க முடியும் என்று சொல்கிறார். உடனே ராதிகாவின் அம்மா குடிகாரன் உங்களையும், கொலைகாரி உங்க அம்மாவையும் நம்பி என் மகளை நான் எப்படி விட்டுட்டு போவேன்.

என் மகளையும் கொன்னு விடுவீர்கள் என்று வாய் கூசாமல் கோபியை பார்த்து ராதிகாவின் அம்மா சண்டை போடுகிறார். உடனே கோபி கோபப்பட்டு நீங்கள் இந்த வீட்டை விட்டு போகவில்லை என்றால் நான் உண்மையிலே உங்களை கொலை செய்து விடுவேன் என்று ஒரு வார்த்தையை சொல்லி விடுகிறார்.

பிறகு ராதிகாவின் அம்மா நேரடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி ஈஸ்வரி மேல் தான் தப்பு இருக்கிறது என்று எல்லாத்தையும் கட்டு கதையாக சொல்லி போலீசை நம்ப வைத்து ஈஸ்வரி அரெஸ்ட் பண்ணுவதற்கு கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார். சரியாக விசாரிக்காத போலீசும் நேரடியாக பாக்யா வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கே எழில் புதுசாக துவங்கப் போகும் கதைக்கு பூஜை எல்லாம் செய்துவிட்டு சந்தோஷமாக கிளம்புகிறார்.

அப்பொழுது அவரை வழி அனுப்புவதற்கு குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வாசலுக்கு வருகிறார்கள். அந்த நேரத்தில் போலீஸ் உள்ளே நுழைந்து ஈஸ்வரி எங்கே என்று வீடு முழுவதும் தேடுகிறார்கள். உடனே எங்களுடைய பாட்டி கும்பகோணம் போயிருக்கிறார்கள் என்று சொல்லிய நிலையில் போலீஸ் அங்கு இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லி அரஸ் பண்ணி கூட்டிட்டு வர சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.

இதை கேட்டதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் என்னுடைய பாட்டி என்ன தவறு பண்ணினார்கள். ஏன் அரெஸ்ட் பண்ண வேண்டும் என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கு எதுவும் பதில் சொல்லாத போலீஸ் உங்க பாட்டி பண்ணின தவறுக்கு நீங்களும் உடந்தையா என்று அவர்களையே கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள்.

இப்படி ராதிகாவின் அம்மா ஓவர் அராஜகம் பண்ணி, ஈஸ்வரியை ஜெயிலுக்கு அனுப்புவதற்கு முடிவெடுத்துவிட்டார். ராதிகாவும், அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்க மறுத்துவிட்டார். இதனால் ஈஸ்வரி ஜாமினில் எடுக்கும் விதமாக கோர்ட் கேஸ் என்று பாக்யா அலையப் போகிறார். கோபி, ராதிகா மீது கோபப்பட்டு சண்டை போடும் அளவிற்கு இவர்களுக்கு இடையில் விரிசல் உண்டாகப் போகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News