நீ காதலிச்சா கரெக்ட்டு நான் காதலிச்சா தப்பா.. பொங்கி எழும் கோபியின் மகள்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் மாமனார் பக்கவாதம் ஏற்பட்டு வீட்டிலேயே அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கின்றனர். அந்த சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் இருந்து ரஜினி என்ற டாக்டர் வீட்டிற்கே வந்து செல்கிறார்.

எனவே இவர் மீது கோபியின் மகள் இனியாவிற்கு இனம்புரியாத கவர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் வரும்போதெல்லாம் தன்னை அலங்கரித்துக் கொண்டு மற்றவர்களுக்கு வித்தியாசமாக தெரியும்படி நடந்து கொள்கிறாள்.

இதை பாக்யாவின் மருமகள் ஜெனி கண்டுபிடித்து விடுகிறாள். அத்துடன் ரஜினி, தாத்தாவிற்கு சிகிச்சை அளிக்கும் போது இனியா அவர் கூட இருந்துகொண்டு ரஜினியுடன் பேச்சுக் கொடுத்து இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாள்.

இப்படி எல்லாம் நடப்பது பார்ப்பதற்கு தவறாகத் தெரிகிறது என ஜெனி, இனியாவை கண்டித்ததால் அதை செழியன் இடம் இனியா போய் அழுதுகொண்டே ஜெனியை மாட்டி விடுகிறாள். உடனே செழியன் ஜெனி சொல்வதை காது கொடுத்து கேட்காமல், ‘என்னுடைய தங்கை இனியா, எந்த தப்பும் செய்யமாட்டாள்.

அவளை நீ கண்டிக்காத’ என்று ஜெனியை இனியா முன்பே திட்டுகிறாள். ஜெனி மற்றும் செழியன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். எனவே இனியா ‘நீங்கள் மட்டும் காதலித்து திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் ஏன் என்னை தவறாக நினைக்கிறீர்கள்’ என்று மனதில் நினைத்துக்கொண்டு ஜெனியை முறைத்துப் பார்க்கிறாள்.

இனியா இப்படியெல்லாம் செய்வது ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் கோபியின் மகளாச்சே, காதல் என்பது கண்மூடித்தனமாக வருவது நியாயம்தான் என சின்னத்திரை ரசிகர்கள் கிண்டல் அடிக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →