வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அடுத்தவன் பொண்டாட்டி மேல் ஆசைப்படாத.. கோபத்தின் உச்சத்துக்கே சென்ற கோபியின் அம்மா!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடமாக தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவதாக ராதிகாவை கோபி திருமணம் செய்து கொள்ள போகிறார். ஆனால் இந்த விஷயம் எதுவும் பாக்யாவிற்கு  தெரியாமல் ரகசியமாகவே இன்றுவரை வைத்திருக்கிறான்.

மறுபுறம் கோபியின் இளையமகன் எழில், கணவனை இழந்து கைக்குழந்தையுடன் இருக்கும் அமிர்தாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். தொடக்கத்தில் எழிலுடைய காதலை மறுத்த அமிர்தா, அவனுடைய நல்ல குணம் தெரிந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக எழிலை அமிர்தா காதலிக்க தொடங்கி விட்டாள்.

எனவே எழில் உடைய தாத்தாவை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்திருக்கும் அமிர்தா உடன் நெருங்கி பழகுவதை நோட்டமிட்டு, அதை பாட்டியிடம் செழியன் போட்டுக் கொடுக்கிறார். அதன்பிறகு பாட்டியும் எழில்-அமிர்தா இருவரும் சாதாரண நண்பர்கள் போல் பழகாமல் காதலர்களாக இருப்பதை கண்டுபிடித்து விடுகிறார்.

இதன் பிறகு எழில் இடம் பாட்டி அமிர்தாவை விட்டு விலகி இரு என கண்டிக்க, நான் அமிர்தாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஒற்றைக்காலில் நின்று அடம்பிடிக்க போகிறான். கடைசியில் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய முடிவினை மாறாமல் எழில், கடைசியில் அமிர்தாவை திருமணம் செய்துகொள்ள போகிறான்.

மேலும் பாக்யாவும் எழிலுடைய காதலை புரிந்துகொண்டு, அதற்கு சம்மதம் தெரிவித்து அவர்கள் இருவரும் சேர்வதற்கு உறுதுணையாக இருக்கப் போகிறாள். இருப்பினும் கணவனை இழந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என நினைக்கும் எழிலிடமே கோபியின் அம்மா இவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறார்.

அவருக்கு மட்டும் தன்னுடைய மகன் கோபி, மருமகளை விட்டு விட்டு இரண்டாவது திருமணம் ஆக இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள போக்கும் உண்மை மட்டும் தெரிந்தால் நிச்சயம் அவர் தாங்க மாட்டார். எனவே அதுவும் கூடிய விரைவில் நடக்கத்தான் போகிறது.

Trending News