Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரிக்கு எதிராக அனைத்து சாட்சிகளும் இருந்ததால் கோர்ட்டில் அவருக்கு தண்டனை கிடைத்துவிட்டது. இதை கேட்டதும் ஈஸ்வரி அப்படியே நொறுக்கி போய்விட்டார். போதாதருக்கு தாத்தா, ஈஸ்வரி மீது எந்த தப்பும் இல்லை விட்டுவிடுங்கள் என்று கதறி ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டார்.
ஆனால் ஈஸ்வரிக்கு சப்போர்ட்டாக சாட்சி எதுவுமே இல்லாததால் ஈஸ்வர் மீது தவறு என்று தீர்ப்பு கொடுக்க தயாராகி விட்டார்கள். உடனே ராதிகா அம்மாவுக்கு மனசுக்குள்ள குளுகுளு என்று சந்தோஷப்பட ஆரம்பித்து விட்டார். அத்துடன் கோபியும் என்ன பண்ணுவது என்று தெரியாமல் அம்மாவை நினைத்து வருந்தி போயிருக்கிறார். அந்த நேரத்தில் தான் பாக்கியா, பழனிச்சாமி மற்றும் மயூ அனைவரும் கோர்ட்டுக்கு வருகிறார்கள்.
மாமியார் மீது ஒட்டுமொத்த கோபத்தை காட்டிய போது
உடனே பாக்யா, மாமனாருக்கு ஆறுதல் சொல்லி நான் அத்தையை எப்படியாவது வெளியே கூட்டிட்டு வந்து விடுவேன். நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் சொல்லி உள்ளே போய் லாயரிடம் அனைத்து விஷயங்களையும் கூறி நீதிபதியிடம் மறுவிசாரணைக்கு நேரம் கேட்கிறார்.
அதன்படி பாக்கியா வந்ததும் மறுபடியும் ஈஸ்வரி கேஸ் ஆரம்பிக்கப்படுகிறது. உடனே ராதிகா அம்மா, பாக்யா வந்துட்டாளா எங்கே இவருடைய மாமியார் ஜெயிலுக்கு போகும்போது இவள் பார்க்க முடியாமல் போயிடுமா என்று கவலையில் இருந்தேன். இப்பொழுது பாக்கியா முன்னாடியே மாமியார் ஜெயிலுக்கு அனுப்புவது சந்தோசம்தான் என்று நினைக்கிறார்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காதபடி லாயர், ராதிகா கீழே விழும் பொழுது என்ன நடந்தது என்று கண்ணால் பார்த்த சாட்சி இருக்கிறது என்று சொல்கிறார். அந்த சாட்சியை விசாரிக்க நீங்கள் அனுமதி கொடுக்கணும் என்று சொல்லிய நிலையில் மயூ பெயரை சொல்கிறார். உடனே பாக்கியா, மயூவை கோர்ட்டுக்குள் கூட்டிட்டு வருகிறார்.
மயூவை பார்த்ததும் என் பொண்ணை ஏன் கூட்டிட்டு வருகிறீர்கள். அவள் ஒரு மைனர் என்று ராதிகா கூச்சலிடுகிறார். உடனே நீதிபதி அமைதியாக இருக்க சொல்லிவிட்டு மயூவே கூண்டில் நின்னு சாட்சி சொல்ல சொல்கிறார். அப்பொழுது மயூவை விசாரித்த லாயர், ஈஸ்வரியை பார்த்து இவங்களை உனக்கு தெரியுமா யார் என்று கேட்கிறார்.
அதற்கு மயூ, ஆம் தெரியும் இவங்க தான் ஈஸ்வரி பாட்டி என்று சொல்கிறார். அன்னைக்கு உங்க அம்மா கீழே விழுந்த பொழுது என்ன நடந்துச்சு. நீங்க அங்கே இருந்து பார்த்தீர்களா என்று கேட்கிறார். அதற்கு மயூ, நான் அங்கு தான் இருந்தேன். ஈஸ்வரி பாட்டியிடம் என்னுடைய அம்மா பேசிவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்துட்டு திரும்பும் பொழுது பூச்செடி கீழே விழுந்தது.
அதில் தெரியாமல் காலை வைத்து வழுகி விழுந்து விட்டார். எங்க அம்மாவை ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை என்று தெள்ளத்தெளிவாக சொல்லிவிட்டார். இதை கேட்டதும் அதிர்ச்சியாகிய ராதிகா, அம்மாவை பார்த்து முறைக்கிறார். போட்ட எல்லா சதி திட்டமும் தவிடு பொடியாகி விட்டதே என்று ராதிகாவின் அம்மா முகம் சுருங்கி போய்விட்டது.
உடனே நீதிபதி, ஈஸ்வரி மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லி வன்மத்தால் இந்த அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய கமலாவுக்கு இந்த கோர்ட் வார்னிங் கொடுக்கிறது என்று சொல்லிக் கேசை முடித்து விட்டார்கள். இதைக் கேட்டதும் கோபி ஒட்டுமொத்த ஆத்திரத்துடன் மாமியாரை பார்க்கிறார். சும்மாவே கோபி, மாமியாரை வச்சு பார்க்க மாட்டார்.
இப்பொழுது அம்மா மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்த நிலையில் ராதிகாவின் அம்மாவுக்கு கொடுக்கும் பதிலடி தான் தரமாக இருக்கப் போகிறது. இதையெல்லாம் தொடர்ந்து பிள்ளைகளால் வளர்ந்த பிறகு எந்த கெதிக்கு வேண்டுமானாலும் ஆளாகலாம். அதனால் என்னுடைய நிலைமை பாக்யாவுக்கு வந்து விடக்கூடாது என்று இனி ஈஸ்வரி, பாக்கியாவிற்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று முடிவு பண்ணி செக் வைக்கப் போகிறார்.
ஆனால் வழக்கம் போல பாக்கியா, எனக்கு நீங்கள் தான் குடும்பம். உங்களையும் என் பிள்ளைகள் பேரக்குழந்தைகளை பார்த்துகிட்டு இருப்பதுதான் எனக்கு சந்தோசம் என்று சொல்லி கடைசி வரை குடும்பத்துக்கு பணிவிடை பார்க்க போகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- ராதிகாவின் மூஞ்சில் கரியை பூசிய பாக்கியா
- ராதிகாவின் திமிரை அடக்கிய வாரிசு
- பாக்யாவிற்காக ராதிகாவிற்கு எதிராக திரும்பும் மயூ