கிட்டத்தட்ட 6 அடியை தாண்டி வளர்ந்து கெட்டா ஒரு நடிகர் 43 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே சுற்றி வருகிறார். இந்த நடிகரின் நண்பர்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி குழந்தைகள் கல்லூரி படிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.
ஆனால் இந்த நடிகர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாததற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஏனென்றால் இப்போது வரை சிங்கிள் என்று சொல்லிக்கொண்டு பல நடிகைகளிடம் சில்மிஷம் செய்துள்ளார். நம்பர் நடிகையுடன் ஒரு படத்தில் மிக நெருக்கமான காட்சியில் இவர் நடித்திருந்தார்.
ஏற்கனவே சர்ச்சைக்கு பெயர் போன நடிகை இவருடனும் சில காலங்கள் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் வளர்ந்து கெட்ட நடிகர் இந்த நம்பர் நடிகை கழட்டிவிட்டு தெலுங்கு நடிகையுடன் பழக ஆரம்பித்து விட்டார். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் அந்த உறவும் முறிந்தது.
அதன் பின்பு தனது உயரத்திற்கு ஏற்றவாறு ஒரு வாரிசு நடிகையை வலையில் சிக்க வைத்தார். இவர்கள் இருவரும் பழகுவது வெளிப்படையாக ரசிகர்களுக்கு தெரிந்ததால் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாரிசு நடிகையையும் பாதியிலேயே கழட்டி விட்டுள்ளார்.
இப்போது வளர்ந்து கெட்ட நடிகரின் நண்பர்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளும்படி அவரை பாடாய்ப் படுத்தி வருகிறார்கள். இதனால் தற்போது தன்னுடன் நடிக்கும் சக நடிகை உடன் பழக ஆரம்பித்துள்ளார். இதுவும் தொடர்கிறதா இல்லை பாதியிலேயே முறிந்து விடுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் போற போக்க பாத்தா இப்படியே தன்னுடைய அறுபதாவது வயதில் தான் இந்த நடிகர் திருமணம் செய்து கொள்வார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த நடிகர் நடிகைகளுடன் அந்தரங்க விளையாட்டுக்காக அப்படி செய்தாலும் செய்வார் என பலரும் கூறுகின்றனர்.