Gossip: சமீப காலமாகவே மூத்த நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை தங்களுக்கு நடந்த அந்தரங்க டார்ச்சலை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதிலும் இளம் நடிகை ஒருவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கேரக்டராக இருந்தாலும் சரி என்று நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நடிகையை 50 வயது மூத்த இயக்குனர் ஒருவர் தன்னுடைய படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு குளுகுளுன்னு இருக்கக்கூடிய இடத்தில் நடத்தி இருக்கின்றனர். அங்கு தான் அந்த நடிகையை 50 வயது இயக்குனர் சீண்டி பார்த்திருக்கிறார்.
கிட்டத்தட்ட ஒரு வாரமா அந்த நடிகைக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தாங்க முடியாத அந்த நடிகை படத்திலிருந்து விலகுவதாக சொல்லிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பி விட்டார். அதன் பின் அந்த நடிகை சினிமாவை வேண்டாம் என ஒதுங்கி விட்டார்.
50 வயது இயக்குனருக்கு எதிராக நடிகை கொடுத்த வாக்குமூலம்
இதையெல்லாம் அந்த நடிகை ஆடியோ ஆதாரத்துடன் இயக்குநரை பற்றி பகிரங்கமாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்த செய்தி தற்போது சோசியல் மீடியாவை பெரும் பரபரப்பாகியுள்ளது. ஏனென்றால் அந்த இயக்குனர் தன்னை ஒரு மாமனிதன் போல் நினைத்துக் கொண்டு எடுக்கிற படத்தில் எல்லாம் நல்ல விஷயங்களை தான் சமுதாயத்திற்கு காட்டிக் கொண்டிருக்கிறார்.
இப்போது அவருடைய முகத்திரையை இளம் நடிகை கிழித்துத் தெரிந்துவிட்டார். அது மட்டுமல்ல அந்த இயக்குனரின் இன்னொரு முகம் என்ன என்பதும் இப்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. இதேப் போன்று தான் சினிமாவில் நிறைய நடிகைகள் சாதிக்க வேண்டும் என வருகின்றனர். ஆனால் அவர்களை எல்லாம் இந்த இயக்குனர் சீண்டிப் பார்ப்பதே தொடர்கதை ஆகிறது.